• Apr 19 2026

மத்திய கிழக்கில் இருந்து பாதுகாப்பாக வெளியேறிய 9000 அமெரிக்கர்கள்

Chithra / Mar 4th 2026, 8:18 am
image

 

மத்திய கிழக்கிலிருந்து இதுவரை சுமார் 9000 அமெரிக்கப் பிரஜைகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.


அத்துடன் பதற்றம் நிறைந்த 14 நாடுகளில் உள்ள அமெரிக்கர்களை வணிக ரீதியான விமானங்கள் மூலம் உடனடியாக வெளியேறுமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.


இதற்காக 24 மணிநேரமும் இயங்கும் ஒரு விசேட அவசரக் குழுவை அமெரிக்க வெளியுறவுத்துறை அமைத்துள்ளது.


இந்தநிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தில் சிக்கியுள்ள 44,000-க்கும் மேற்பட்ட பயணிகள் படிப்படியாகத் தமது நாடுகளுக்குத் திருப்பி அனுப்பப்படவுள்ளனர்


வான்பரப்பு மூடப்பட்டதால் அங்கு 1,000-க்கும் மேற்பட்ட வானூர்திகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.


இதனையடுத்து, அமீரக அரசாங்கம் தங்குமிட வசதி இல்லாத 20,000-க்கும் மேற்பட்ட பயணிகளுக்கு தங்குமிட மற்றும் உணவுச் செலவுகளைத் தானே ஏற்றுக்கொண்டுள்ளது.


மத்திய கிழக்கில் இருந்து பாதுகாப்பாக வெளியேறிய 9000 அமெரிக்கர்கள்  மத்திய கிழக்கிலிருந்து இதுவரை சுமார் 9000 அமெரிக்கப் பிரஜைகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.அத்துடன் பதற்றம் நிறைந்த 14 நாடுகளில் உள்ள அமெரிக்கர்களை வணிக ரீதியான விமானங்கள் மூலம் உடனடியாக வெளியேறுமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.இதற்காக 24 மணிநேரமும் இயங்கும் ஒரு விசேட அவசரக் குழுவை அமெரிக்க வெளியுறவுத்துறை அமைத்துள்ளது.இந்தநிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தில் சிக்கியுள்ள 44,000-க்கும் மேற்பட்ட பயணிகள் படிப்படியாகத் தமது நாடுகளுக்குத் திருப்பி அனுப்பப்படவுள்ளனர்வான்பரப்பு மூடப்பட்டதால் அங்கு 1,000-க்கும் மேற்பட்ட வானூர்திகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.இதனையடுத்து, அமீரக அரசாங்கம் தங்குமிட வசதி இல்லாத 20,000-க்கும் மேற்பட்ட பயணிகளுக்கு தங்குமிட மற்றும் உணவுச் செலவுகளைத் தானே ஏற்றுக்கொண்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement