• May 19 2026

கதவு தாழ்ப்பாளால் மனைவியை தாக்கிய 84 வயது கணவன்; 79 வயது மனைவி பலி

Chithra / Jan 2nd 2026, 11:10 am
image


அகலவத்தை - தெல்பாவத்த பகுதியில் கணவனின் தாக்குதலில் மனைவி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 


நேற்று காலை இச் சம்பவம் அரங்கேறியுள்ளது. 


உயிரிழந்தவர் தெல்பாவத்த, மககம பகுதியைச் சேர்ந்த 79 வயதுடைய பெண் என குறிப்பிடப்படுகின்றது. 


குடும்பத் தகராறு காரணமாக, கணவர் கதவு தாழ்ப்பாளால் தாக்கியதில் மனைவி உயிரிழந்துள்ளதாக   முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 


இக்கொலை சம்பவம் தொடர்பாக 84 வயதுடைய சந்தேகநபரான கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். 


பிரேதப் பரிசோதனைக்குப் பின்னர், உயிரிழந்த வயேதிப பெண்ணின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 


இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அகலவத்தை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

கதவு தாழ்ப்பாளால் மனைவியை தாக்கிய 84 வயது கணவன்; 79 வயது மனைவி பலி அகலவத்தை - தெல்பாவத்த பகுதியில் கணவனின் தாக்குதலில் மனைவி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று காலை இச் சம்பவம் அரங்கேறியுள்ளது. உயிரிழந்தவர் தெல்பாவத்த, மககம பகுதியைச் சேர்ந்த 79 வயதுடைய பெண் என குறிப்பிடப்படுகின்றது. குடும்பத் தகராறு காரணமாக, கணவர் கதவு தாழ்ப்பாளால் தாக்கியதில் மனைவி உயிரிழந்துள்ளதாக   முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இக்கொலை சம்பவம் தொடர்பாக 84 வயதுடைய சந்தேகநபரான கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். பிரேதப் பரிசோதனைக்குப் பின்னர், உயிரிழந்த வயேதிப பெண்ணின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அகலவத்தை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement