• May 17 2026

சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட 78 மீனவர்கள் கைது

Aathira / Sep 21st 2025, 8:50 am
image

சட்டவிரோத மீன்பிடி முறைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 78 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

 கடந்த இரண்டு வாரங்களுக்குள் கடற்படையினர் உள்நாட்டு கடற்பகுதிகளில் நடத்திய சோதனையின் போதே அவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

இந்த மீனவர்களுடன் 35 டிங்கி படகுகளும், பல நாள் மீன்பிடி படகும் பறிமுதல் செய்யப்பட்டது. 

சட்டவிரோத மீன்பிடி உபகரணங்கள், தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள் மற்றும் வெடிபொருட்களை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட  சந்தேக நபர்கள், 

திருகோணமலை அருகே உள்ள கடலோர பகுதிகளிலும் காரைதீவு முதல் நிந்தவூர் வரை உள்ள கடல் பகுதியிலும் நடைபெற்ற விசேட தேடுதல் நடவடிக்கைகளில் போது கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கடற்றொழில் திணைக்களத்துக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளனர். 

சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட 78 மீனவர்கள் கைது சட்டவிரோத மீன்பிடி முறைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 78 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். கடந்த இரண்டு வாரங்களுக்குள் கடற்படையினர் உள்நாட்டு கடற்பகுதிகளில் நடத்திய சோதனையின் போதே அவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.இந்த மீனவர்களுடன் 35 டிங்கி படகுகளும், பல நாள் மீன்பிடி படகும் பறிமுதல் செய்யப்பட்டது. சட்டவிரோத மீன்பிடி உபகரணங்கள், தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள் மற்றும் வெடிபொருட்களை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட  சந்தேக நபர்கள், திருகோணமலை அருகே உள்ள கடலோர பகுதிகளிலும் காரைதீவு முதல் நிந்தவூர் வரை உள்ள கடல் பகுதியிலும் நடைபெற்ற விசேட தேடுதல் நடவடிக்கைகளில் போது கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கடற்றொழில் திணைக்களத்துக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளனர். 

Advertisement

Advertisement

Advertisement