• May 18 2026

தலவாக்கலையில் தற்காலிக முகாமிலிருந்த 67 குடும்பங்கள் வெளியேற்றம்

Chithra / Jan 4th 2026, 3:26 pm
image


தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிறேட்வெஸ்டன் பாடசாலை இடைத்தங்கல் முகாமில் இருந்து பொது மக்கள் வெளியேறியுள்ளனர்.


 கிறேட்வெஸ்டன் தோட்டத்தில் உள்ள லயன் குடியிருப்புகளில், கடந்த காலங்களில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக மண்சரிவு அபாயம் மற்றும் வெடிப்புகள் காணப்பட்டன. 


இதன் காரணமாக, குறித்த வீடுகளில் வசித்த 67 குடும்பங்களைச் சேர்ந்த 270 பேர் தற்காலிகமாக கிறேட்வெஸ்டன் தமிழ் மகா வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். 


இந்நிலையில், கடந்த சில நாட்களாக அப்பகுதியில் சீரான காலநிலை நிலவி வருவதால், தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவன (NBRO) அதிகாரிகளால் அப்பகுதியில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. 


இந்த ஆய்வின் பின்னர், கிறேட்வெஸ்டன் தோட்டத்தில் பாரியளவிலான மண்சரிவு அபாயம் இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 


இதனையடுத்து, நாளை (05) பாடசாலைகள் மீள ஆரம்பமாகவுள்ள நிலையில், அங்கு தங்க வைக்கப்பட்டிருந்த மக்கள் இன்று (04) தற்காலிக முகாமிலிருந்து வெளியேறிச் சென்றனர்.

தலவாக்கலையில் தற்காலிக முகாமிலிருந்த 67 குடும்பங்கள் வெளியேற்றம் தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிறேட்வெஸ்டன் பாடசாலை இடைத்தங்கல் முகாமில் இருந்து பொது மக்கள் வெளியேறியுள்ளனர். கிறேட்வெஸ்டன் தோட்டத்தில் உள்ள லயன் குடியிருப்புகளில், கடந்த காலங்களில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக மண்சரிவு அபாயம் மற்றும் வெடிப்புகள் காணப்பட்டன. இதன் காரணமாக, குறித்த வீடுகளில் வசித்த 67 குடும்பங்களைச் சேர்ந்த 270 பேர் தற்காலிகமாக கிறேட்வெஸ்டன் தமிழ் மகா வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக அப்பகுதியில் சீரான காலநிலை நிலவி வருவதால், தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவன (NBRO) அதிகாரிகளால் அப்பகுதியில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த ஆய்வின் பின்னர், கிறேட்வெஸ்டன் தோட்டத்தில் பாரியளவிலான மண்சரிவு அபாயம் இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து, நாளை (05) பாடசாலைகள் மீள ஆரம்பமாகவுள்ள நிலையில், அங்கு தங்க வைக்கப்பட்டிருந்த மக்கள் இன்று (04) தற்காலிக முகாமிலிருந்து வெளியேறிச் சென்றனர்.

Advertisement

Advertisement

Advertisement