குமுதினி படுகொலையின் 41 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு எதிர்வரும் வெள்ளிக்கிழமை (15/05) நெடுந்தீவில் உணர்வுபூர்வமாக நினைவுகூரப்படவுள்ளது.
அன்றையதினம் (15/05) காலை 8.30 மணிக்கு நெடுந்தீவு மாவிலித்துறை வீரபத்திரப்பிள்ளையார் ஆலயம், நெடுந்தீவு மாவிலித்துறை சவேரியார் ஆலயம், நெடுந்தீவு தென்னிந்திய திருச்சபை ஆலயம், மற்றும் நெடுந்தீவு தேவசபை ஆலயம் என்பவற்றில், படுகொலை செய்யப்பட்ட உறவுகளின் ஆத்மா சாந்திக்கான வழிபாடுகள் சம நேரத்தில் இடம்பெறவுள்ளது.
அதனைத் தொடர்ந்து காலை 9.15 மணிக்கு மாவிலித்துறைமுகப் பகுதியில் படுகொலை செய்யப்பட்டோர் நினைவாக அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபிவளாகத்தில் நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுவினரின் ஏற்பாட்டில் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளது.
இதேவேளை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வார நிகழ்வுகளின் தொடரில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கலும் இதன்போது தீவக நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழுவினரால் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
1985.05.15 அன்று காலை பல கனவுகளுடன் நெடுந்தீவில் இருந்து குறிகாட்டுவான் நோக்கிச் குமுதினித் தாய் சுமந்து சென்ற எம் உறவுகளின் உயிர் நடுக்கடலில் பறிக்கப்பட்டு நான்கு தசாப்த்தங்கள் கடந்து நினைவுகூரும் நினைவு அஞ்சலி நிகழ்வுகளின் போது உறவினர்கள் , நண்பர்கள் மற்றும் அனைவரும் கலந்துகொண்டு ஆத்மசாந்திக்காக பிரார்த்திக்க நினைவேந்தல் ஏற்பாட்டாளர்கள் அழைத்து நிற்கின்றனர்
குமுதினி படுகொலையின் 41 ஆம் ஆண்டு நினைவேந்தல் குமுதினி படுகொலையின் 41 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு எதிர்வரும் வெள்ளிக்கிழமை (15/05) நெடுந்தீவில் உணர்வுபூர்வமாக நினைவுகூரப்படவுள்ளது.அன்றையதினம் (15/05) காலை 8.30 மணிக்கு நெடுந்தீவு மாவிலித்துறை வீரபத்திரப்பிள்ளையார் ஆலயம், நெடுந்தீவு மாவிலித்துறை சவேரியார் ஆலயம், நெடுந்தீவு தென்னிந்திய திருச்சபை ஆலயம், மற்றும் நெடுந்தீவு தேவசபை ஆலயம் என்பவற்றில், படுகொலை செய்யப்பட்ட உறவுகளின் ஆத்மா சாந்திக்கான வழிபாடுகள் சம நேரத்தில் இடம்பெறவுள்ளது.அதனைத் தொடர்ந்து காலை 9.15 மணிக்கு மாவிலித்துறைமுகப் பகுதியில் படுகொலை செய்யப்பட்டோர் நினைவாக அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபிவளாகத்தில் நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுவினரின் ஏற்பாட்டில் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளது.இதேவேளை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வார நிகழ்வுகளின் தொடரில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கலும் இதன்போது தீவக நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழுவினரால் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.1985.05.15 அன்று காலை பல கனவுகளுடன் நெடுந்தீவில் இருந்து குறிகாட்டுவான் நோக்கிச் குமுதினித் தாய் சுமந்து சென்ற எம் உறவுகளின் உயிர் நடுக்கடலில் பறிக்கப்பட்டு நான்கு தசாப்த்தங்கள் கடந்து நினைவுகூரும் நினைவு அஞ்சலி நிகழ்வுகளின் போது உறவினர்கள் , நண்பர்கள் மற்றும் அனைவரும் கலந்துகொண்டு ஆத்மசாந்திக்காக பிரார்த்திக்க நினைவேந்தல் ஏற்பாட்டாளர்கள் அழைத்து நிற்கின்றனர்