சர்வதேச பொலிஸாரால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள இலங்கை குற்றவாளிகளில் 30 பேர் தாங்கள் தங்கியிருந்த இடங்களை விட்டு திடீரெனத் தலைமறைவாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவர்களை கண்டறிந்து கைது செய்வதற்கான நடவடிக்கைகள் தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) தெரிவித்துள்ளது.
சர்வதேச அளவில் தேடப்பட்டு வரும் 60 இலங்கை குற்றவாளிகளில் இந்த 30 பேரும் அடங்குவதாகவும், அவர்கள் எந்த நாட்டிற்குத் தப்பிச் சென்றிருந்தாலும் அவர்களை சட்டத்தின் முன்னிறுத்துவதற்கான அனைத்து சர்வதேச சட்ட நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சிஐடியின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த பட்டியலில் பெருமளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்கள், நிதி மோசடிகளில் ஈடுபட்டவர்கள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பல்வேறு ஆபத்தான குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர்கள் இடம்பெற்றுள்ளனர்.
தாங்கள் தங்கியிருந்த நாடுகளின் பாதுகாப்பு அமைப்புகளால் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என்ற அச்சம் காரணமாகவே, இக்குற்றவாளிகள் தங்கள் இருப்பிடங்களை விட்டு அவசரமாக தப்பிச் சென்றிருக்கலாம் என சிஐடி சந்தேகம் வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், சர்வதேச பொலிஸாரின் சிவப்பு எச்சரிக்கைக்குட்பட்டிருந்த 42 இலங்கை குற்றவாளிகள் இதுவரை வெற்றிகரமாக இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ளவர்களை கைது செய்ய சர்வதேச ஒத்துழைப்புடன் கூடிய விசாரணைகள் மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச பொலிஸாரால் தேடப்படும் 30 இலங்கை குற்றவாளிகள் தலைமறைவு: சிஐடி தீவிர வேட்டை சர்வதேச பொலிஸாரால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள இலங்கை குற்றவாளிகளில் 30 பேர் தாங்கள் தங்கியிருந்த இடங்களை விட்டு திடீரெனத் தலைமறைவாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர்களை கண்டறிந்து கைது செய்வதற்கான நடவடிக்கைகள் தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) தெரிவித்துள்ளது.சர்வதேச அளவில் தேடப்பட்டு வரும் 60 இலங்கை குற்றவாளிகளில் இந்த 30 பேரும் அடங்குவதாகவும், அவர்கள் எந்த நாட்டிற்குத் தப்பிச் சென்றிருந்தாலும் அவர்களை சட்டத்தின் முன்னிறுத்துவதற்கான அனைத்து சர்வதேச சட்ட நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சிஐடியின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.இந்த பட்டியலில் பெருமளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்கள், நிதி மோசடிகளில் ஈடுபட்டவர்கள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பல்வேறு ஆபத்தான குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர்கள் இடம்பெற்றுள்ளனர்.தாங்கள் தங்கியிருந்த நாடுகளின் பாதுகாப்பு அமைப்புகளால் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என்ற அச்சம் காரணமாகவே, இக்குற்றவாளிகள் தங்கள் இருப்பிடங்களை விட்டு அவசரமாக தப்பிச் சென்றிருக்கலாம் என சிஐடி சந்தேகம் வெளியிட்டுள்ளது.இந்நிலையில், சர்வதேச பொலிஸாரின் சிவப்பு எச்சரிக்கைக்குட்பட்டிருந்த 42 இலங்கை குற்றவாளிகள் இதுவரை வெற்றிகரமாக இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ளவர்களை கைது செய்ய சர்வதேச ஒத்துழைப்புடன் கூடிய விசாரணைகள் மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.