• May 20 2026

பதுளை மண்சரிவில் சிக்கி பலர் மாயம்; 11 பேர் பலி!

Chithra / Nov 27th 2025, 9:13 am
image



பதுளை மாவட்டத்தில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட மண்சரிவுகளில் சிக்கி 11 பேர் உயிரிழந்துள்ளனர். 


மேலும், 7 பேர் வரை காணாமல் போயுள்ளனர் என பதுளை மாவட்டச் செயலாளர் பந்துக்க அபேவர்தன தெரிவித்துள்ளார். 


சீரற்ற வானிலை காரணமாக மாவட்டத்தில் நேற்று 7 இடங்களில் நிலச்சரிவுகள் மற்றும் மண்மேடுகள் சரிந்து விழுந்த சம்பவங்கள் பதிவாகியுள்ளன. 


இந்த அனர்த்தங்களில் சிக்கி இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர். 


மேலும் சுமார் 7 பேர் வரை காணாமல் போயுள்ளனர் என்று மாவட்டச் செயலாளர் பந்துக்க அபேவர்தன தெரிவித்துள்ளார். 


காணாமல் போனவர்களைத் தேடும் பணிகளில் நிவாரணக் குழுக்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


இதனிடையே, பதுளை-மஹியங்கனை வீதியின் தல்தேன, புசல்ல பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. 

 

இதன் காரணமாக மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு வாகன சாரதிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பதுளை மண்சரிவில் சிக்கி பலர் மாயம்; 11 பேர் பலி பதுளை மாவட்டத்தில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட மண்சரிவுகளில் சிக்கி 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 7 பேர் வரை காணாமல் போயுள்ளனர் என பதுளை மாவட்டச் செயலாளர் பந்துக்க அபேவர்தன தெரிவித்துள்ளார். சீரற்ற வானிலை காரணமாக மாவட்டத்தில் நேற்று 7 இடங்களில் நிலச்சரிவுகள் மற்றும் மண்மேடுகள் சரிந்து விழுந்த சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இந்த அனர்த்தங்களில் சிக்கி இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் சுமார் 7 பேர் வரை காணாமல் போயுள்ளனர் என்று மாவட்டச் செயலாளர் பந்துக்க அபேவர்தன தெரிவித்துள்ளார். காணாமல் போனவர்களைத் தேடும் பணிகளில் நிவாரணக் குழுக்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.இதனிடையே, பதுளை-மஹியங்கனை வீதியின் தல்தேன, புசல்ல பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.  இதன் காரணமாக மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு வாகன சாரதிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement