• May 17 2026

சீரற்ற வானிலையால் 141 வீடுகள் சேதம்; ஆயிரக்கணக்கானோர் பாதிப்பு

Aathira / May 16th 2026, 10:28 am
image

நாட்டில் தற்போது நிலவி வரும் சீரற்ற வானிலை காரணமாக நாடு முழுவதும் 141 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

கடந்த 10ஆம் திகதி முதல் இன்று (16) வரையான காலப்பகுதிக்குள் இந்த வீடுகள் சேதமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், இரத்தினபுரி மாவட்டத்தில் ஒரு வீடு முழுமையாக சேதமடைந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.

பகுதியளவில் சேதமடைந்த வீடுகளில் அதிக எண்ணிக்கை களுத்துறை மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளதுடன், அங்கு 78 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.

அதற்கு அடுத்ததாக மட்டக்களப்பு மாவட்டத்தில் 25 வீடுகளும், இரத்தினபுரியில் 12 வீடுகளும், காலியில் 6 வீடுகளும், கொழும்பில் 5 வீடுகளும், மொனராகலையில் 4 வீடுகளும், 

யாழ்ப்பாணத்தில் 4 வீடுகளும், கம்பஹாவில் 3 வீடுகளும், ஹம்பாந்தோட்ட மற்றும் அனுராதபுர மாவட்டங்களில் தலா 2 வீடுகளும் சேதமடைந்துள்ளன.

இதேவேளை, இந்த அனர்த்த நிலைமையால் 4,099 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 48 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்குட்பட்ட 1,263 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.

சீரற்ற வானிலையால் 141 வீடுகள் சேதம்; ஆயிரக்கணக்கானோர் பாதிப்பு நாட்டில் தற்போது நிலவி வரும் சீரற்ற வானிலை காரணமாக நாடு முழுவதும் 141 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.கடந்த 10ஆம் திகதி முதல் இன்று (16) வரையான காலப்பகுதிக்குள் இந்த வீடுகள் சேதமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.மேலும், இரத்தினபுரி மாவட்டத்தில் ஒரு வீடு முழுமையாக சேதமடைந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.பகுதியளவில் சேதமடைந்த வீடுகளில் அதிக எண்ணிக்கை களுத்துறை மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளதுடன், அங்கு 78 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.அதற்கு அடுத்ததாக மட்டக்களப்பு மாவட்டத்தில் 25 வீடுகளும், இரத்தினபுரியில் 12 வீடுகளும், காலியில் 6 வீடுகளும், கொழும்பில் 5 வீடுகளும், மொனராகலையில் 4 வீடுகளும், யாழ்ப்பாணத்தில் 4 வீடுகளும், கம்பஹாவில் 3 வீடுகளும், ஹம்பாந்தோட்ட மற்றும் அனுராதபுர மாவட்டங்களில் தலா 2 வீடுகளும் சேதமடைந்துள்ளன.இதேவேளை, இந்த அனர்த்த நிலைமையால் 4,099 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி, 48 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்குட்பட்ட 1,263 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement