• Aug 04 2026

ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் கைது; தராசு, மோட்டார் சைக்கிள் பறிமுதல்

Aathira / Aug 3rd 2026, 2:08 pm
image

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கருவாட்டுக்கல் 03 பகுதியில், ஐஸ் போதைப்பொருளுடன் 32 வயதுடைய இளைஞர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இளைஞர்களை குறிவைத்து அந்த பகுதியில் போதைப்பொருள் விற்பனை நடைபெறுவதாக கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், பொலிஸார் திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையை மேற்கொண்டனர்.

அப்போது, பிளாஸ்டிக் குழாயினுள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 10 கிராம் 970 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டதுடன், அதனுடன் தொடர்புடைய சந்தேகநபரும் கைது செய்யப்பட்டார்.

மேலும், அவரிடமிருந்து மோட்டார் சைக்கிள், கைப்பேசி மற்றும் இலத்திரனியல் தராசு ஆகியவையும் சான்றுப் பொருட்களாக பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபருக்கு ஏற்கனவே 3 பிடிவிறாந்துகள் நிலுவையில் இருப்பதாகவும், அவரை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக சம்மாந்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் கைது; தராசு, மோட்டார் சைக்கிள் பறிமுதல் அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கருவாட்டுக்கல் 03 பகுதியில், ஐஸ் போதைப்பொருளுடன் 32 வயதுடைய இளைஞர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.இளைஞர்களை குறிவைத்து அந்த பகுதியில் போதைப்பொருள் விற்பனை நடைபெறுவதாக கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், பொலிஸார் திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையை மேற்கொண்டனர்.அப்போது, பிளாஸ்டிக் குழாயினுள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 10 கிராம் 970 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டதுடன், அதனுடன் தொடர்புடைய சந்தேகநபரும் கைது செய்யப்பட்டார்.மேலும், அவரிடமிருந்து மோட்டார் சைக்கிள், கைப்பேசி மற்றும் இலத்திரனியல் தராசு ஆகியவையும் சான்றுப் பொருட்களாக பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.கைது செய்யப்பட்ட நபருக்கு ஏற்கனவே 3 பிடிவிறாந்துகள் நிலுவையில் இருப்பதாகவும், அவரை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக சம்மாந்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement