• May 19 2026

ஆடு அடைக்கச் சென்ற இளைஞன் சடலமாக மீட்பு - மன்னாரில் அதிர்ச்சிச் சம்பவம்

Chithra / May 18th 2026, 12:31 pm
image

மன்னார் பகுதியில் தனது ஆடுகளைப் பட்டியில் அடைக்கச் சென்ற இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


மன்னார், கள்ளிக்கட்டைக்காடு பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய அனோஜன் என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.


குறித்த இளைஞர் கடந்த சனிக்கிழமை (16) வீட்டிலிருந்து ஆட்டுப்பட்டி அமைந்துள்ள இடத்திற்குச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது. அச்சமயம் அப்பகுதியில் கடும் மழை பெய்திருந்ததாகவும் கூறப்படுகிறது.


இதன் பின்னர், ஆட்டுப்பட்டிக்கு அருகில் அவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.


உயிரிழந்த இளைஞருக்கு அடிக்கடி வலிப்பு நோய் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படும் நிலையில், சம்பவம் இடம்பெற்ற தினத்திலும் அவருக்கு வலிப்பு ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.


அதன் காரணமாக அங்கு தேங்கிக் கிடந்த மழைநீரில் தவறி விழுந்து உயிரிழந்திருக்கலாம் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


சம்பவம் மற்றும் மரணம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


ஆடு அடைக்கச் சென்ற இளைஞன் சடலமாக மீட்பு - மன்னாரில் அதிர்ச்சிச் சம்பவம் மன்னார் பகுதியில் தனது ஆடுகளைப் பட்டியில் அடைக்கச் சென்ற இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.மன்னார், கள்ளிக்கட்டைக்காடு பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய அனோஜன் என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.குறித்த இளைஞர் கடந்த சனிக்கிழமை (16) வீட்டிலிருந்து ஆட்டுப்பட்டி அமைந்துள்ள இடத்திற்குச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது. அச்சமயம் அப்பகுதியில் கடும் மழை பெய்திருந்ததாகவும் கூறப்படுகிறது.இதன் பின்னர், ஆட்டுப்பட்டிக்கு அருகில் அவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.உயிரிழந்த இளைஞருக்கு அடிக்கடி வலிப்பு நோய் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படும் நிலையில், சம்பவம் இடம்பெற்ற தினத்திலும் அவருக்கு வலிப்பு ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.அதன் காரணமாக அங்கு தேங்கிக் கிடந்த மழைநீரில் தவறி விழுந்து உயிரிழந்திருக்கலாம் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.சம்பவம் மற்றும் மரணம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement