• Sep 13 2026

அராலியில் சாட்சியமளித்துவிட்டு வீடு திரும்பிய இளைஞன் மீது வாள்வெட்டு: வவுனியாவில் நால்வர் கைது

Chithra / Sep 13th 2026, 11:05 am
image


யாழ்ப்பாணம் - ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் சாட்சியமளித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த இளைஞர் மீது அராலிச் சந்தியில் வைத்து வாள்வெட்டுத் தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


நெடுந்தீவைச் சேர்ந்த இரு தரப்பினருக்கு இடையில் ஏற்கனவே இடம்பெற்றிருந்த பிரச்சினை தொடர்பான வழக்கு, கடந்த 9ஆம் திகதி ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.


இதன்போது குறித்த வழக்கில் சாட்சியமளித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த இளைஞர் மீதே அராலிச் சந்தியில் வைத்து வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


சம்பவத்தைத் தொடர்ந்து சந்தேகநபர்கள் தலைமறைவாகியிருந்த நிலையில், யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளின் அடிப்படையில் அவர்கள் வவுனியா – நெடுங்கேணி பகுதியில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.


கைது செய்யப்பட்ட நால்வரில் மூவர் நேரடியாக தாக்குதலில் ஈடுபட்டவர்கள் எனவும், மற்றையவர் தாக்குதலைத் திட்டமிட்டவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


சந்தேகநபர்களிடம் இருந்து இரண்டு வாள்கள், ஒரு கத்தி, உள்ளூரில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு ஒன்று மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் என்பனவும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.


கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அவர்களை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

அராலியில் சாட்சியமளித்துவிட்டு வீடு திரும்பிய இளைஞன் மீது வாள்வெட்டு: வவுனியாவில் நால்வர் கைது யாழ்ப்பாணம் - ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் சாட்சியமளித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த இளைஞர் மீது அராலிச் சந்தியில் வைத்து வாள்வெட்டுத் தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.நெடுந்தீவைச் சேர்ந்த இரு தரப்பினருக்கு இடையில் ஏற்கனவே இடம்பெற்றிருந்த பிரச்சினை தொடர்பான வழக்கு, கடந்த 9ஆம் திகதி ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.இதன்போது குறித்த வழக்கில் சாட்சியமளித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த இளைஞர் மீதே அராலிச் சந்தியில் வைத்து வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சம்பவத்தைத் தொடர்ந்து சந்தேகநபர்கள் தலைமறைவாகியிருந்த நிலையில், யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளின் அடிப்படையில் அவர்கள் வவுனியா – நெடுங்கேணி பகுதியில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்ட நால்வரில் மூவர் நேரடியாக தாக்குதலில் ஈடுபட்டவர்கள் எனவும், மற்றையவர் தாக்குதலைத் திட்டமிட்டவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சந்தேகநபர்களிடம் இருந்து இரண்டு வாள்கள், ஒரு கத்தி, உள்ளூரில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு ஒன்று மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் என்பனவும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அவர்களை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement