இங்கிலாந்தில் வீடு வாடகைக்கு வாழ்வதை விட உலகைச் சுற்றிப் பார்ப்பதே குறைந்த செலவாகும் என்பதை உணர்ந்த பிரித்தானிய குடும்பம் ஒன்று, அனைத்து உடைமைகளையும் விற்று குழந்தைகளுடன் உலகச் சுற்றுப் பயணத்தைத் தொடங்கியுள்ளது.
2024 டிசம்பரில் ஆஸ்திரேலிய விசாவுக்கு விண்ணப்பித்த இந்த தம்பதியினர், 2025 பெப்ரவரியில் தங்கள் வீட்டை விற்பனைக்கு வைத்தனர். வீடு விற்க பல மாதங்கள் ஆகும் என எதிர்பார்த்த நிலையில், மூன்று நாட்களுக்குள் வீடு விற்றது.
இதையடுத்து, விசா கிடைக்கும் வரை இங்கிலாந்தில் Airbnb-யில் தங்க மாதம் £3,000 முதல் £4,000 வரை செலவாகும் என்பதை உணர்ந்த அவர்கள், அதைவிட உலகைச் சுற்றிப் பார்ப்பதே மலிவு என முடிவெடுத்தனர்.
தங்கள் கார் உள்ளிட்ட அனைத்து உடைமைகளையும் விற்று, இரண்டு முதுகுப் பைகளில் தேவையான உடைகள் மட்டும் எடுத்துக்கொண்டு, கடந்த நவம்பர் 7ஆம் திகதி தாய்லாந்து நோக்கி பயணத்தைத் தொடங்கினர். முதல் மாதத்தில் சுமார் £2,000 மட்டுமே செலவழித்ததாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
தற்போது தாய்லாந்தின் வடக்குப் பகுதியில் உள்ள சியாங் மே நகரில் தங்கியுள்ள இந்த குடும்பம் சமூக வலைதள கணக்கின் மூலம் தங்கள் பயண அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறது.
மனிதவளத் துறையில் பணியாற்றிய குளோயி, “ஆடம்பரப் பொருட்கள் அவசியமில்லை என்பதை இந்தப் பயணம் எங்களுக்கு உணர்த்தியுள்ளது. என குறிப்பிட்டுள்ளார்
வீட்டை விற்றுவிட்டு நாடோடிகளாக மாறிய இளம் குடும்பம் இங்கிலாந்தில் வீடு வாடகைக்கு வாழ்வதை விட உலகைச் சுற்றிப் பார்ப்பதே குறைந்த செலவாகும் என்பதை உணர்ந்த பிரித்தானிய குடும்பம் ஒன்று, அனைத்து உடைமைகளையும் விற்று குழந்தைகளுடன் உலகச் சுற்றுப் பயணத்தைத் தொடங்கியுள்ளது.2024 டிசம்பரில் ஆஸ்திரேலிய விசாவுக்கு விண்ணப்பித்த இந்த தம்பதியினர், 2025 பெப்ரவரியில் தங்கள் வீட்டை விற்பனைக்கு வைத்தனர். வீடு விற்க பல மாதங்கள் ஆகும் என எதிர்பார்த்த நிலையில், மூன்று நாட்களுக்குள் வீடு விற்றது.இதையடுத்து, விசா கிடைக்கும் வரை இங்கிலாந்தில் Airbnb-யில் தங்க மாதம் £3,000 முதல் £4,000 வரை செலவாகும் என்பதை உணர்ந்த அவர்கள், அதைவிட உலகைச் சுற்றிப் பார்ப்பதே மலிவு என முடிவெடுத்தனர்.தங்கள் கார் உள்ளிட்ட அனைத்து உடைமைகளையும் விற்று, இரண்டு முதுகுப் பைகளில் தேவையான உடைகள் மட்டும் எடுத்துக்கொண்டு, கடந்த நவம்பர் 7ஆம் திகதி தாய்லாந்து நோக்கி பயணத்தைத் தொடங்கினர். முதல் மாதத்தில் சுமார் £2,000 மட்டுமே செலவழித்ததாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.தற்போது தாய்லாந்தின் வடக்குப் பகுதியில் உள்ள சியாங் மே நகரில் தங்கியுள்ள இந்த குடும்பம் சமூக வலைதள கணக்கின் மூலம் தங்கள் பயண அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறது.மனிதவளத் துறையில் பணியாற்றிய குளோயி, “ஆடம்பரப் பொருட்கள் அவசியமில்லை என்பதை இந்தப் பயணம் எங்களுக்கு உணர்த்தியுள்ளது. என குறிப்பிட்டுள்ளார்