• May 21 2026

ஆசியாவிலேயே மிக மோசமான வீழ்ச்சி: இலங்கை ரூபாய்க்கு பின்னடைவு - 'புளூம்பெர்க்' அதிர்ச்சி அறிக்கை!

Chithra / May 21st 2026, 11:08 am
image

மே மாதத்தில் ஆசியாவிலேயே மிக மோசமான செயல்திறனைக் கொண்ட நாணயமாக  இலங்கை ரூபாய் (LKR) பதிவாகியுள்ளதாக சர்வதேச வர்த்தக ஊடகமான புளூம்பேர்க் (Bloomberg) செய்தி வெளியிட்டுள்ளது.


இலங்கை ரூபாயின் திடீர் வீழ்ச்சிக்கு உள்நாட்டு இறக்குமதியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களின் வர்த்தக நடவடிக்கைகளே பிரதான காரணங்களாகக் கூறப்படுகின்றன.


உள்நாட்டு இறக்குமதியாளர்கள் சந்தையில் அமெரிக்க டொலர்களை வாங்குவதைக் கணிசமாக அதிகரித்துள்ளனர்


நாட்டின் ஏற்றுமதியாளர்கள் தங்களுக்குக் கிடைக்கும் வெளிநாட்டு நாணய வருவாயை (Foreign-currency earnings) உடனுக்குடன் இலங்கை ரூபாயாக மாற்றுவதைத் தவிர்த்து, காலதாமதம் செய்து வருகின்றனர்.


சந்தையில் டொலருக்கான தேவை அதிகரித்த போதிலும், அதற்கேற்ற விநியோகம் கிடைக்காததால் இந்த நாணய நெருக்கடி தீவிரமடைந்துள்ளது என பொருளாதார ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.


இதேவேளை, டொலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மிகக் குறுகிய காலத்திற்குள் இந்தளவுக்கு பெருமளவில் வீழ்ச்சியடைவது நாட்டின் பொருளாதாரத்திற்கு கடுமையான ஆபத்தாக முடியும் என பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளியியல் துறையின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார். 


இந்நிலையைக் கட்டுப்படுத்துவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால், எதிர்காலத்தில் பணவீக்கம் பெருமளவில் உயரக்கூடும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

ஆசியாவிலேயே மிக மோசமான வீழ்ச்சி: இலங்கை ரூபாய்க்கு பின்னடைவு - 'புளூம்பெர்க்' அதிர்ச்சி அறிக்கை மே மாதத்தில் ஆசியாவிலேயே மிக மோசமான செயல்திறனைக் கொண்ட நாணயமாக  இலங்கை ரூபாய் (LKR) பதிவாகியுள்ளதாக சர்வதேச வர்த்தக ஊடகமான புளூம்பேர்க் (Bloomberg) செய்தி வெளியிட்டுள்ளது.இலங்கை ரூபாயின் திடீர் வீழ்ச்சிக்கு உள்நாட்டு இறக்குமதியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களின் வர்த்தக நடவடிக்கைகளே பிரதான காரணங்களாகக் கூறப்படுகின்றன.உள்நாட்டு இறக்குமதியாளர்கள் சந்தையில் அமெரிக்க டொலர்களை வாங்குவதைக் கணிசமாக அதிகரித்துள்ளனர்நாட்டின் ஏற்றுமதியாளர்கள் தங்களுக்குக் கிடைக்கும் வெளிநாட்டு நாணய வருவாயை (Foreign-currency earnings) உடனுக்குடன் இலங்கை ரூபாயாக மாற்றுவதைத் தவிர்த்து, காலதாமதம் செய்து வருகின்றனர்.சந்தையில் டொலருக்கான தேவை அதிகரித்த போதிலும், அதற்கேற்ற விநியோகம் கிடைக்காததால் இந்த நாணய நெருக்கடி தீவிரமடைந்துள்ளது என பொருளாதார ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.இதேவேளை, டொலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மிகக் குறுகிய காலத்திற்குள் இந்தளவுக்கு பெருமளவில் வீழ்ச்சியடைவது நாட்டின் பொருளாதாரத்திற்கு கடுமையான ஆபத்தாக முடியும் என பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளியியல் துறையின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார். இந்நிலையைக் கட்டுப்படுத்துவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால், எதிர்காலத்தில் பணவீக்கம் பெருமளவில் உயரக்கூடும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement