• Sep 12 2026

அடுத்த காலாண்டில் மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்படாது?

Chithra / Sep 11th 2026, 2:23 pm
image


அடுத்த காலாண்டில் மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கான கோரிக்கையை முன்வைக்க எதிர்பார்க்கவில்லை என வலுசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார்.


இன்று (11) பாராளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர், 


எதிர்பார்த்ததைவிட அதிகளவான மழைவீழ்ச்சி கிடைத்ததன் காரணமாக, நீர்மின் உற்பத்திக்கான செலவை ஓரளவுக்குக் கட்டுப்படுத்த முடிந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.


இதன் காரணமாக, அடுத்த காலாண்டில் மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை என அவர் தெரிவித்தார்.


அதற்கமைய, மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கான கோரிக்கையை எந்த வகையிலும் முன்வைக்க எதிர்பார்க்கவில்லை எனவும் அமைச்சர் கூறினார்.


இதேவேளை, எதிர்வரும் ஆண்டின் முதல் மூன்று மாதங்களிலும் தடையின்றி மின்சாரத்தை வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


இதற்கான உரிய நடவடிக்கைகளை வலுசக்தி அமைச்சு ஏற்கனவே முன்னெடுத்துள்ளதாகவும் அமைச்சர் அனுர கருணாதிலக சுட்டிக்காட்டினார்.

அடுத்த காலாண்டில் மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்படாது அடுத்த காலாண்டில் மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கான கோரிக்கையை முன்வைக்க எதிர்பார்க்கவில்லை என வலுசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார்.இன்று (11) பாராளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர், எதிர்பார்த்ததைவிட அதிகளவான மழைவீழ்ச்சி கிடைத்ததன் காரணமாக, நீர்மின் உற்பத்திக்கான செலவை ஓரளவுக்குக் கட்டுப்படுத்த முடிந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.இதன் காரணமாக, அடுத்த காலாண்டில் மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை என அவர் தெரிவித்தார்.அதற்கமைய, மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கான கோரிக்கையை எந்த வகையிலும் முன்வைக்க எதிர்பார்க்கவில்லை எனவும் அமைச்சர் கூறினார்.இதேவேளை, எதிர்வரும் ஆண்டின் முதல் மூன்று மாதங்களிலும் தடையின்றி மின்சாரத்தை வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.இதற்கான உரிய நடவடிக்கைகளை வலுசக்தி அமைச்சு ஏற்கனவே முன்னெடுத்துள்ளதாகவும் அமைச்சர் அனுர கருணாதிலக சுட்டிக்காட்டினார்.

Advertisement

Advertisement

Advertisement