பலாங்கொடை, பல்லேவெல பகுதியில் வீட்டில் தனிமையில் வசித்து வந்த பெண் ஒருவர் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட தேடுதலின்போதே சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நேற்று வியாழக்கிழமை (23) மாலை பலாங்கொடை பிரதான நீதவான், சட்ட வைத்திய அதிகாரி, குற்றத்தடுப்பு விசாரணைப் பிரிவு அதிகாரிகள் மற்றும் விரல் அடையாளப் பிரிவு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, இரத்தினபுரி பொலிஸ் மோப்ப நாய் பிரிவின் உதவியுடன் சந்தேக நபரை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டபோதிலும், அது தோல்வியில் முடிவடைந்தது.
உயிரிழந்தவரின் சடலம் தொடர்பான பிரேத பரிசோதனை இன்று பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் செய்யப்படவுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் பின்னவல பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
தனிமையில் இருந்த பெண் சித்திரவதை செய்யப்பட்டு கொலை: மோப்ப நாயுடன் களமிறங்கிய பொலிஸார் பலாங்கொடை, பல்லேவெல பகுதியில் வீட்டில் தனிமையில் வசித்து வந்த பெண் ஒருவர் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட தேடுதலின்போதே சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.நேற்று வியாழக்கிழமை (23) மாலை பலாங்கொடை பிரதான நீதவான், சட்ட வைத்திய அதிகாரி, குற்றத்தடுப்பு விசாரணைப் பிரிவு அதிகாரிகள் மற்றும் விரல் அடையாளப் பிரிவு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தியுள்ளனர்.இதனைத் தொடர்ந்து, இரத்தினபுரி பொலிஸ் மோப்ப நாய் பிரிவின் உதவியுடன் சந்தேக நபரை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டபோதிலும், அது தோல்வியில் முடிவடைந்தது.உயிரிழந்தவரின் சடலம் தொடர்பான பிரேத பரிசோதனை இன்று பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் செய்யப்படவுள்ளது.இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் பின்னவல பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.