• Sep 29 2026

78 வயது மூதாட்டியிடம் அன்பை காட்டி நகையை திருடிய பெண்!

Ziya / Sep 28th 2026, 12:54 pm
image

கனடாவின் பிராம்ப்டனில், 78 வயது மூதாட்டியிடம் நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் நடித்து, சுமார் 20,000 கனேடிய டொலர் மதிப்புள்ள தங்க நகைகளைத் திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இந்தச் சம்பவம் Chinguacousy Road மற்றும் Bovaird Drive West அருகிலுள்ள குடியிருப்புப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.


மூதாட்டி வழக்கம்போல் மாலை நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, அவருக்கு அருகில் ஒரு வாகனம் வந்து நின்றுள்ளது.


மூதாட்டிக்கு ஆங்கிலம் சரளமாகத் தெரியாத நிலையில், வாகனத்தில் இருந்து இறங்கிய பெண் முதலில் அவரை அணுகியுள்ளார்.


அந்தப் பெண் மூதாட்டியின் கால்களைத் தொட்டு வணங்கி, பின்னர் அவரைக் கட்டிப்பிடித்ததாக அவரது மகன் ராகவேந்திர குமார் தெரிவித்துள்ளார். இதனால் அந்தப் பெண் தமக்குத் தெரிந்த அண்டை வீட்டுப் பெண் என மூதாட்டி தவறாக நினைத்துள்ளார்


அந்தச் சில நொடிகளில், மூதாட்டி அணிந்திருந்த உண்மையான தங்க நெக்லஸை அகற்றிவிட்டு, அதற்குப் பதிலாக போலி நகையை அணிவித்ததாகவும், அவரது தங்க வளையல்களும் எடுத்துச் செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மூதாட்டியின் மகன் வழங்கிய தகவலின்படி, சுமார் 110 கிராம் எடையுள்ள நகைகள் திருடப்பட்டுள்ளன. அவற்றின் தங்கத்தின் மூலப்பொருள் மதிப்பு மட்டும் சுமார் 20,000 கனேடிய டொலர் .


நகைகள் திருடப்பட்டதை உணர்ந்த பின்னர், மூதாட்டி கடுமையாக அதிர்ச்சியடைந்து நடுங்கியதாக அவரது மகன் தெரிவித்துள்ளார். அவரால் நடக்க முடியாத நிலையும் ஏற்பட்டதாகவும், வீட்டுக்குத் திரும்பிய பின்னர் சுமார் 30 நிமிடங்கள் பேச முடியவில்லை என்றும் கூறியுள்ளார்.


அவருக்கு இதயநோய் இருப்பதால், நகைகளைவிட தனது தாயின் உடல்நிலையே அப்போது அதிக கவலையை ஏற்படுத்தியதாக மகன் தெரிவித்துள்ளார். 


மகன் அருகிலுள்ள வீடுகளில் இருந்து சேகரித்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை பொலிஸாரிடம் வழங்கியுள்ளார்.


குறித்த சம்பவம்  தொடர்பாக விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகபொலிஸார் தெரிவித்துள்ளனர்.

78 வயது மூதாட்டியிடம் அன்பை காட்டி நகையை திருடிய பெண் கனடாவின் பிராம்ப்டனில், 78 வயது மூதாட்டியிடம் நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் நடித்து, சுமார் 20,000 கனேடிய டொலர் மதிப்புள்ள தங்க நகைகளைத் திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்தச் சம்பவம் Chinguacousy Road மற்றும் Bovaird Drive West அருகிலுள்ள குடியிருப்புப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.மூதாட்டி வழக்கம்போல் மாலை நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, அவருக்கு அருகில் ஒரு வாகனம் வந்து நின்றுள்ளது.மூதாட்டிக்கு ஆங்கிலம் சரளமாகத் தெரியாத நிலையில், வாகனத்தில் இருந்து இறங்கிய பெண் முதலில் அவரை அணுகியுள்ளார்.அந்தப் பெண் மூதாட்டியின் கால்களைத் தொட்டு வணங்கி, பின்னர் அவரைக் கட்டிப்பிடித்ததாக அவரது மகன் ராகவேந்திர குமார் தெரிவித்துள்ளார். இதனால் அந்தப் பெண் தமக்குத் தெரிந்த அண்டை வீட்டுப் பெண் என மூதாட்டி தவறாக நினைத்துள்ளார்அந்தச் சில நொடிகளில், மூதாட்டி அணிந்திருந்த உண்மையான தங்க நெக்லஸை அகற்றிவிட்டு, அதற்குப் பதிலாக போலி நகையை அணிவித்ததாகவும், அவரது தங்க வளையல்களும் எடுத்துச் செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மூதாட்டியின் மகன் வழங்கிய தகவலின்படி, சுமார் 110 கிராம் எடையுள்ள நகைகள் திருடப்பட்டுள்ளன. அவற்றின் தங்கத்தின் மூலப்பொருள் மதிப்பு மட்டும் சுமார் 20,000 கனேடிய டொலர் .நகைகள் திருடப்பட்டதை உணர்ந்த பின்னர், மூதாட்டி கடுமையாக அதிர்ச்சியடைந்து நடுங்கியதாக அவரது மகன் தெரிவித்துள்ளார். அவரால் நடக்க முடியாத நிலையும் ஏற்பட்டதாகவும், வீட்டுக்குத் திரும்பிய பின்னர் சுமார் 30 நிமிடங்கள் பேச முடியவில்லை என்றும் கூறியுள்ளார்.அவருக்கு இதயநோய் இருப்பதால், நகைகளைவிட தனது தாயின் உடல்நிலையே அப்போது அதிக கவலையை ஏற்படுத்தியதாக மகன் தெரிவித்துள்ளார். மகன் அருகிலுள்ள வீடுகளில் இருந்து சேகரித்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை பொலிஸாரிடம் வழங்கியுள்ளார்.குறித்த சம்பவம்  தொடர்பாக விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகபொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement