• Apr 28 2026

நவராத்திரி கொண்டாட்டத்தில் கணவருடன் நடனமாடிய பெண்; மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சோகம்!

shanu / Sep 30th 2025, 2:11 pm
image

நவராத்திரி கொண்டாட்டத்தின்போது கணவருடன் நடனமாடிக் கொண்டிருந்த 19 வயது இளம்பெண் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


மத்திய பிரதேச மாநிலத்தில் கர்கோன் மாவட்டத்திலுள்ள பலாசி கிராமத்தைச் சேர்ந்த சோனம் என்ற 19 வயதான இளம்பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 


வட இந்தியாவில் நவராத்திரி பண்டிகை கடந்த சில நாள்களாக களைகட்டி வருகிறது.  அந்த வகையில் இதுதொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் மத்திய பிரதேசத்தின்  கர்கோன் மாவட்டத்திலுள்ள பலாசி கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் சோனம்,  தன் கணவர் கிருஷ்ணபாலுடன் இணைந்து கார்பா நடனமாடிக் கொண்டிருந்தார். 


நடனமாடிக் கொண்டிருந்த போதே அவர்  கீழே தரையில் விழுந்தார். உடனே கணவன் மற்றும் உறவினர்கள் அவரை மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றனர்.  எனினும் அவர்  ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.  மருத்துவ பரிசோதனையில் மாரடைப்பால் அவர் உயிர் பிரிந்திருக்கலாம் எனத் தெரிவித்தனர்.  


குறித்த பெண் கணவருடன் நடனமாடிக் கொண்டிருக்கும் போது தரையில் விழுந்து உயிரிழந்த காட்சி காணொளியாகப் பதிவாகி வெளிவந்து குடும்பத்திகரை மட்டுமன்றி அப்பகுதியையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 


உயிரிழப்பின் பின்னர் மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கையில், வயது வித்தியாசமின்றி யாருக்கும் மாரடைப்பு ஏற்படலாம். சில சமயங்களில், அறியப்படாத மற்றும் கண்டறியப்படாத இதய நோய்கள் உள்ளவர்களுக்கு எந்த வகையான உடல் செயல்பாடும் இதய பிரச்னைகளைத் தூண்டும். திடீர் இதய மரணம் என்பது அனைத்து இதய செயல்பாடுகளின் விரைவான மற்றும் எதிர்பார்க்கப்படும் முடிவு என்று தெரிவித்துள்ளனர். 


அண்மைக்காலமாக மாரடைப்பால் சிறுவர்கள், இளம்பெண்கள், இளைஞர்கள் யுவதிகள் என வயது வேறுபாடின்றி உயிரிழந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

நவராத்திரி கொண்டாட்டத்தில் கணவருடன் நடனமாடிய பெண்; மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சோகம் நவராத்திரி கொண்டாட்டத்தின்போது கணவருடன் நடனமாடிக் கொண்டிருந்த 19 வயது இளம்பெண் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.மத்திய பிரதேச மாநிலத்தில் கர்கோன் மாவட்டத்திலுள்ள பலாசி கிராமத்தைச் சேர்ந்த சோனம் என்ற 19 வயதான இளம்பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். வட இந்தியாவில் நவராத்திரி பண்டிகை கடந்த சில நாள்களாக களைகட்டி வருகிறது.  அந்த வகையில் இதுதொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் மத்திய பிரதேசத்தின்  கர்கோன் மாவட்டத்திலுள்ள பலாசி கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் சோனம்,  தன் கணவர் கிருஷ்ணபாலுடன் இணைந்து கார்பா நடனமாடிக் கொண்டிருந்தார். நடனமாடிக் கொண்டிருந்த போதே அவர்  கீழே தரையில் விழுந்தார். உடனே கணவன் மற்றும் உறவினர்கள் அவரை மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றனர்.  எனினும் அவர்  ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.  மருத்துவ பரிசோதனையில் மாரடைப்பால் அவர் உயிர் பிரிந்திருக்கலாம் எனத் தெரிவித்தனர்.  குறித்த பெண் கணவருடன் நடனமாடிக் கொண்டிருக்கும் போது தரையில் விழுந்து உயிரிழந்த காட்சி காணொளியாகப் பதிவாகி வெளிவந்து குடும்பத்திகரை மட்டுமன்றி அப்பகுதியையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. உயிரிழப்பின் பின்னர் மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கையில், வயது வித்தியாசமின்றி யாருக்கும் மாரடைப்பு ஏற்படலாம். சில சமயங்களில், அறியப்படாத மற்றும் கண்டறியப்படாத இதய நோய்கள் உள்ளவர்களுக்கு எந்த வகையான உடல் செயல்பாடும் இதய பிரச்னைகளைத் தூண்டும். திடீர் இதய மரணம் என்பது அனைத்து இதய செயல்பாடுகளின் விரைவான மற்றும் எதிர்பார்க்கப்படும் முடிவு என்று தெரிவித்துள்ளனர். அண்மைக்காலமாக மாரடைப்பால் சிறுவர்கள், இளம்பெண்கள், இளைஞர்கள் யுவதிகள் என வயது வேறுபாடின்றி உயிரிழந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement