• Sep 29 2026

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ரூ.3.66 கோடி நகைகளுடன் பெண் கைது

Aathira / Sep 29th 2026, 6:57 am
image

சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் நகைகள் அடங்கிய பொதியுடன் பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர் அங்கொட, ஹல்கஹதெனிய வீதியைச் சேர்ந்த 38 வயதுடைய பெண் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான UL-226 விமானம் மூலம் நேற்று (28) டுபாயிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

இதன்போது, குறித்த பெண்ணின் பயணப் பொதியை சோதனையிட்ட அதிகாரிகள், அதிலிருந்து 916 கிராம் எடையுடைய காப்புகள் மற்றும் கழுத்து மாலைகளை கண்டுபிடித்துள்ளனர்.

கண்டுபிடிக்கப்பட்ட நகைகளின் மொத்த பெறுமதி சுமார் 3 கோடியே 66 இலட்சத்து 28 ஆயிரத்து 937 ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளுக்காக கைது செய்யப்பட்ட பெண்ணை கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ரூ.3.66 கோடி நகைகளுடன் பெண் கைது சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் நகைகள் அடங்கிய பொதியுடன் பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.கைது செய்யப்பட்டவர் அங்கொட, ஹல்கஹதெனிய வீதியைச் சேர்ந்த 38 வயதுடைய பெண் என தெரிவிக்கப்பட்டுள்ளது.அவர் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான UL-226 விமானம் மூலம் நேற்று (28) டுபாயிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.இதன்போது, குறித்த பெண்ணின் பயணப் பொதியை சோதனையிட்ட அதிகாரிகள், அதிலிருந்து 916 கிராம் எடையுடைய காப்புகள் மற்றும் கழுத்து மாலைகளை கண்டுபிடித்துள்ளனர்.கண்டுபிடிக்கப்பட்ட நகைகளின் மொத்த பெறுமதி சுமார் 3 கோடியே 66 இலட்சத்து 28 ஆயிரத்து 937 ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.மேலதிக விசாரணைகளுக்காக கைது செய்யப்பட்ட பெண்ணை கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

Advertisement

Advertisement

Advertisement