• Sep 22 2026

அதிகாலை கிராமத்துக்குள் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம்! உயிரச்சத்தில் தோப்பூர் மக்கள்

Chithra / Sep 21st 2026, 11:19 am
image


திருகோணமலை மாவட்டத்தின் தோப்பூர் – செல்வநகர் கிராமத்திற்குள் இன்று (21) திங்கட்கிழமை அதிகாலை காட்டு யானைகள் புகுந்து சேதங்களை ஏற்படுத்தியுள்ளன.


கிராமத்திற்குள் நுழைந்த காட்டு யானைகள், பயன்தரும் தென்னை, வாழை உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தியுள்ளன.


அத்துடன், அப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு வேலியையும் காட்டு யானைகள் சேதப்படுத்தியுள்ளது.


காட்டு யானைகளின் தொடர்ச்சியான நடமாட்டத்தால் தமது வாழ்வாதாரப் பயிர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு வருவதாகத் தெரிவிக்கும் செல்வநகர் கிராம மக்கள், 

யானைகளை கட்டுப்படுத்தவும், தமது பாதுகாப்பை உறுதி செய்யவும் அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதிகாலை கிராமத்துக்குள் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம் உயிரச்சத்தில் தோப்பூர் மக்கள் திருகோணமலை மாவட்டத்தின் தோப்பூர் – செல்வநகர் கிராமத்திற்குள் இன்று (21) திங்கட்கிழமை அதிகாலை காட்டு யானைகள் புகுந்து சேதங்களை ஏற்படுத்தியுள்ளன.கிராமத்திற்குள் நுழைந்த காட்டு யானைகள், பயன்தரும் தென்னை, வாழை உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தியுள்ளன.அத்துடன், அப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு வேலியையும் காட்டு யானைகள் சேதப்படுத்தியுள்ளது.காட்டு யானைகளின் தொடர்ச்சியான நடமாட்டத்தால் தமது வாழ்வாதாரப் பயிர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு வருவதாகத் தெரிவிக்கும் செல்வநகர் கிராம மக்கள், யானைகளை கட்டுப்படுத்தவும், தமது பாதுகாப்பை உறுதி செய்யவும் அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement