கந்தளாய், பேராறு பகுதியில் கிராமத்திற்குள் புகுந்த இரண்டு காட்டு யானைகள், வனவிலங்கு அதிகாரிகளின் பல மணி நேர தீவிர முயற்சிக்குப் பின்னர் நேற்று (05) மாலை பாதுகாப்பாக வனப்பகுதியை நோக்கி விரட்டப்பட்டுள்ளன.
கடந்த 04ஆம் திகதி பேராறு கிராமத்திற்குள் நுழைந்த காட்டு யானைகள், குடியிருப்புகள் நிறைந்த பகுதிகளில் நடமாடியதால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்திற்கும் பீதிக்கும் உள்ளாகினர்.
இதனையடுத்து சம்பவம் தொடர்பில் கந்தளாய் வனவிலங்கு அலுவலக அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் வழங்கப்பட்டது. தொடர்ந்து நேற்று அதிகாலை முதல் வனவிலங்கு அதிகாரிகள், பொலிஸார் மற்றும் கிராம மக்கள் இணைந்து யானைகளை கிராமத்தை விட்டு வெளியேற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
நாள் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட தொடர் முயற்சிகளின் பலனாக, நேற்று மாலை இரண்டு காட்டு யானைகளும் பாதுகாப்பாக வனப்பகுதிக்குள் விரட்டியடிக்கப்பட்டன.
எனினும், கிராமத்திற்குள் புகுந்திருந்த யானைகள் அங்கு நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளொன்றை சேதப்படுத்தியுள்ளதுடன், பல வீடுகளின் பாதுகாப்பு வேலிகளையும் உடைத்து சேதப்படுத்தியுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
அடிக்கடி கிராமங்களுக்குள் புகுந்து சேதங்களை ஏற்படுத்தும் காட்டு யானைகளிடமிருந்து பேராறு கிராம மக்களையும் அவர்களின் சொத்துக்களையும் பாதுகாக்க நிரந்தரத் தீர்வு ஒன்றை ஏற்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பேராறு கிராமத்திற்குள் காட்டு யானை அட்டகாசம்; பல மணி நேர போராட்டத்துக்குப் பின் விரட்டியடிப்பு கந்தளாய், பேராறு பகுதியில் கிராமத்திற்குள் புகுந்த இரண்டு காட்டு யானைகள், வனவிலங்கு அதிகாரிகளின் பல மணி நேர தீவிர முயற்சிக்குப் பின்னர் நேற்று (05) மாலை பாதுகாப்பாக வனப்பகுதியை நோக்கி விரட்டப்பட்டுள்ளன.கடந்த 04ஆம் திகதி பேராறு கிராமத்திற்குள் நுழைந்த காட்டு யானைகள், குடியிருப்புகள் நிறைந்த பகுதிகளில் நடமாடியதால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்திற்கும் பீதிக்கும் உள்ளாகினர்.இதனையடுத்து சம்பவம் தொடர்பில் கந்தளாய் வனவிலங்கு அலுவலக அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் வழங்கப்பட்டது. தொடர்ந்து நேற்று அதிகாலை முதல் வனவிலங்கு அதிகாரிகள், பொலிஸார் மற்றும் கிராம மக்கள் இணைந்து யானைகளை கிராமத்தை விட்டு வெளியேற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.நாள் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட தொடர் முயற்சிகளின் பலனாக, நேற்று மாலை இரண்டு காட்டு யானைகளும் பாதுகாப்பாக வனப்பகுதிக்குள் விரட்டியடிக்கப்பட்டன.எனினும், கிராமத்திற்குள் புகுந்திருந்த யானைகள் அங்கு நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளொன்றை சேதப்படுத்தியுள்ளதுடன், பல வீடுகளின் பாதுகாப்பு வேலிகளையும் உடைத்து சேதப்படுத்தியுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.அடிக்கடி கிராமங்களுக்குள் புகுந்து சேதங்களை ஏற்படுத்தும் காட்டு யானைகளிடமிருந்து பேராறு கிராம மக்களையும் அவர்களின் சொத்துக்களையும் பாதுகாக்க நிரந்தரத் தீர்வு ஒன்றை ஏற்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.