• Sep 04 2026

யாத்திரிகர்களை ஏற்றிச் சென்ற பேருந்தை தாக்கிய காட்டு யானை - 10 பேர் வைத்தியசாலையில்!

Chithra / Sep 3rd 2026, 2:49 pm
image

 

கதிர்காமம் – புத்தல வீதியில் காட்டு யானை ஒன்று தனியார் பேருந்தை தாக்கியதில், பேருந்து வீதியை விட்டு விலகி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சுமார் 10 பேர் காயமடைந்துள்ளனர்.


இந்த விபத்து இன்று (03) காலை 11.00 மணியளவில் கதிர்காமம் – புத்தல வீதியில், மின்சார வேலி காவலரணுக்கு அருகில் இடம்பெற்றுள்ளது.


சிலாபத்திலிருந்து கதிர்காமத்திற்கு யாத்திரைக்காக சென்ற குழுவினரை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்து, புத்தல – கதிர்காமம் வீதியில் பயணித்துக்கொண்டிருந்தபோது வீதியில் இருந்த காட்டு யானை பேருந்தை தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.


யானையின் தாக்குதலையடுத்து சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து வீதியை விட்டு விலகி கவிழ்ந்துள்ளது. விபத்து இடம்பெற்றபோது பேருந்தில் சுமார் 40 பயணிகள் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.


விபத்தில் காயமடைந்த சுமார் 10 பேர் சிகிச்சைக்காக கதிர்காமம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


எனினும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள காயமடைந்தவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.


இச்சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 


யாத்திரிகர்களை ஏற்றிச் சென்ற பேருந்தை தாக்கிய காட்டு யானை - 10 பேர் வைத்தியசாலையில்  கதிர்காமம் – புத்தல வீதியில் காட்டு யானை ஒன்று தனியார் பேருந்தை தாக்கியதில், பேருந்து வீதியை விட்டு விலகி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சுமார் 10 பேர் காயமடைந்துள்ளனர்.இந்த விபத்து இன்று (03) காலை 11.00 மணியளவில் கதிர்காமம் – புத்தல வீதியில், மின்சார வேலி காவலரணுக்கு அருகில் இடம்பெற்றுள்ளது.சிலாபத்திலிருந்து கதிர்காமத்திற்கு யாத்திரைக்காக சென்ற குழுவினரை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்து, புத்தல – கதிர்காமம் வீதியில் பயணித்துக்கொண்டிருந்தபோது வீதியில் இருந்த காட்டு யானை பேருந்தை தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.யானையின் தாக்குதலையடுத்து சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து வீதியை விட்டு விலகி கவிழ்ந்துள்ளது. விபத்து இடம்பெற்றபோது பேருந்தில் சுமார் 40 பயணிகள் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.விபத்தில் காயமடைந்த சுமார் 10 பேர் சிகிச்சைக்காக கதிர்காமம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.எனினும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள காயமடைந்தவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.இச்சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

Advertisement

Advertisement

Advertisement