• Aug 26 2026

கணவனின் கத்திக்குத்துக்கு இலக்காகி மனைவி உயிரிழப்பு - தலைமன்னாரில் பயங்கரம்

Chithra / Aug 26th 2026, 2:12 pm
image


தலைமன்னார் ரயில் நிலையப் பகுதியில் உள்ள வீடொன்றில் கணவனின் கத்திக்குத்துக்கு இலக்கான மனைவி உயிரிழந்த சம்பவம் இன்று புதன்கிழமை (26) காலை இடம்பெற்றுள்ளது.


குறித்த சம்பவம் இன்று காலை சுமார் 9 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


கத்திக்குத்துக்கு இலக்கான பெண் உடனடியாக தலைமன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.


உயிரிழந்த பெண் இரண்டு பிள்ளைகளின் தாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இச்சம்பவம் தொடர்பில் பெண்ணின் கணவரை தலைமன்னார் பொலிஸார் தலைமன்னார் பகுதியில் வைத்து கைது செய்துள்ளனர்.


சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தலைமன்னார் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

கணவனின் கத்திக்குத்துக்கு இலக்காகி மனைவி உயிரிழப்பு - தலைமன்னாரில் பயங்கரம் தலைமன்னார் ரயில் நிலையப் பகுதியில் உள்ள வீடொன்றில் கணவனின் கத்திக்குத்துக்கு இலக்கான மனைவி உயிரிழந்த சம்பவம் இன்று புதன்கிழமை (26) காலை இடம்பெற்றுள்ளது.குறித்த சம்பவம் இன்று காலை சுமார் 9 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.கத்திக்குத்துக்கு இலக்கான பெண் உடனடியாக தலைமன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.உயிரிழந்த பெண் இரண்டு பிள்ளைகளின் தாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இச்சம்பவம் தொடர்பில் பெண்ணின் கணவரை தலைமன்னார் பொலிஸார் தலைமன்னார் பகுதியில் வைத்து கைது செய்துள்ளனர்.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தலைமன்னார் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement