• Oct 02 2026

இந்திய மீனவர்கள் விவகாரத்தில் பேச்சுவார்த்தை தாமதமாவது ஏன்? –என்.எம்.ஆலம் கேள்வி

Chithra / Oct 1st 2026, 3:04 pm
image


இலங்கை கடற்பரப்பிற்குள் இந்திய மீனவர்கள் அத்துமீறி நுழைந்து முன்னெடுக்கும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகள் முழுமையாக நிறுத்தப்பட்டால் மாத்திரமே இருதரப்பு அதிகாரிகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தைகள் வெற்றியளிக்கும் என வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் ஊடகப் பேச்சாளர் என்.எம்.ஆலம் தெரிவித்துள்ளார்.


மன்னாரில் இன்று (01) வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.


இந்திய மீனவர்கள் தொடர்பில் அதிகாரி மட்டத்திலான பேச்சுவார்த்தைகள் குறித்து பல தடவைகள் தெரிவிக்கப்பட்ட போதிலும், இதுவரை அதற்கான உரிய முன் ஆயத்தங்கள் மேற்கொள்ளப்படவில்லை என அவர் குற்றம் சாட்டினார்.


அவர் மேலும் தெரிவிக்கையில் 



பேச்சுவார்த்தைக்கான திகதி ஒன்று தீர்மானிக்கப்பட்டதாகவும், பின்னர் இந்திய தரப்பினால் வேறு திகதிக்கு மாற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும், இதுவரை புதிய திகதி இறுதி செய்யப்படாமல் காலம் இழுத்தடிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.


இலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் அத்துமீறி நுழைந்து சட்டவிரோதமாக மீன்பிடிப்பதை முழுமையாக நிறுத்துவதற்கு அவர்கள் இணங்கினால் மாத்திரமே பேச்சுவார்த்தை அர்த்தமுள்ளதாகவும் வெற்றியளிக்கக்கூடியதாகவும் அமையும் என என்.எம்.ஆலம் தெரிவித்தார்.


அத்துடன், பேச்சுவார்த்தைக்கான காலதாமதம் காரணமாக இந்திய மீனவர்கள் தொடர்ந்தும் இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்கும் நிலை ஏற்படுவதாகவும், இதனால் வடபகுதி மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதுடன், அவர்களின் மீன்பிடி வலைகள் மற்றும் உபகரணங்களும் சேதப்படுத்தப்படுவதாகவும் அவர் கூறினார்.


இந்திய மீனவர்களின் பிரச்சினை தொடர்பில் இலங்கை அரசாங்கம் மெத்தனப்போக்குடன் செயற்படுவதாக தமக்கு தென்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.


தமிழக அரசாங்கத்திற்கும் இந்த விடயத்தில் முக்கிய பொறுப்பு உள்ளதாக குறிப்பிட்ட அவர், இழுவைமடி மற்றும் ட்ரோலர் முறையிலான மீன்பிடியை கைவிட்டு மாற்றுத் தொழில்களில் ஈடுபடுவதற்கு மீனவர்களை ஊக்குவிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.


மாற்றுத் தொழில்களுக்கு மாறுவதற்கான அரசாங்கத் திட்டங்கள் நடைமுறையில் இருந்தபோதிலும், அவற்றை முறையாக ஊக்குவிக்காமல், சட்டவிரோதமான மீன்பிடி முறைகளை தொடர்வதற்கு ஊக்கமளிக்கும் வகையில் சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.


இதேவேளை, இலங்கை கடற்பரப்பில் உள்நாட்டு ரீதியாகவும் தடை செய்யப்பட்ட மற்றும் ஒழுங்குபடுத்தப்படாத மீன்பிடி முறைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக என்.எம்.ஆலம் தெரிவித்தார்.


குறிப்பாக மன்னார் மாவட்டத்தில் சர்ச்சைக்குரியதாக காணப்படும் சுருக்குவலை மீன்பிடி தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், 2024ஆம் ஆண்டுக்கு முன்னர் 74 மீனவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், 2025ஆம் ஆண்டில் அந்த எண்ணிக்கை 45 ஆகவும், 2026ஆம் ஆண்டில் 30 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.


சுருக்குவலை மீன்பிடி முறையை படிப்படியாக குறைத்து எதிர்காலத்தில் முற்றாக இல்லாதொழிக்கும் அரசாங்கத்தின் முயற்சியை வரவேற்பதாகவும், எனினும் தற்போது மீனவர்களுக்கு தெளிவற்ற நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


கடந்த மாதம் மன்னாரில் இடம்பெற்ற மீனவர் அபிவிருத்திக் கூட்டத்தில் இந்த பிரச்சினை தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டதாகவும், ஒரு வார காலத்திற்குள் தீர்வு வழங்கப்படும் என அமைச்சர் உறுதியளித்திருந்த போதிலும், ஒரு மாதம் கடந்தும் அந்த தீர்வு நடைமுறைக்கு வரவில்லை எனவும் என்.எம்.ஆலம் சுட்டிக்காட்டினார்.


இதனால் குறித்த விடயம் தொடர்பில் மீனவர்கள் மத்தியில் குழப்பநிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இந்திய மீனவர்கள் விவகாரத்தில் பேச்சுவார்த்தை தாமதமாவது ஏன் –என்.எம்.ஆலம் கேள்வி இலங்கை கடற்பரப்பிற்குள் இந்திய மீனவர்கள் அத்துமீறி நுழைந்து முன்னெடுக்கும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகள் முழுமையாக நிறுத்தப்பட்டால் மாத்திரமே இருதரப்பு அதிகாரிகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தைகள் வெற்றியளிக்கும் என வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் ஊடகப் பேச்சாளர் என்.எம்.ஆலம் தெரிவித்துள்ளார்.மன்னாரில் இன்று (01) வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.இந்திய மீனவர்கள் தொடர்பில் அதிகாரி மட்டத்திலான பேச்சுவார்த்தைகள் குறித்து பல தடவைகள் தெரிவிக்கப்பட்ட போதிலும், இதுவரை அதற்கான உரிய முன் ஆயத்தங்கள் மேற்கொள்ளப்படவில்லை என அவர் குற்றம் சாட்டினார்.அவர் மேலும் தெரிவிக்கையில் பேச்சுவார்த்தைக்கான திகதி ஒன்று தீர்மானிக்கப்பட்டதாகவும், பின்னர் இந்திய தரப்பினால் வேறு திகதிக்கு மாற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும், இதுவரை புதிய திகதி இறுதி செய்யப்படாமல் காலம் இழுத்தடிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.இலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் அத்துமீறி நுழைந்து சட்டவிரோதமாக மீன்பிடிப்பதை முழுமையாக நிறுத்துவதற்கு அவர்கள் இணங்கினால் மாத்திரமே பேச்சுவார்த்தை அர்த்தமுள்ளதாகவும் வெற்றியளிக்கக்கூடியதாகவும் அமையும் என என்.எம்.ஆலம் தெரிவித்தார்.அத்துடன், பேச்சுவார்த்தைக்கான காலதாமதம் காரணமாக இந்திய மீனவர்கள் தொடர்ந்தும் இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்கும் நிலை ஏற்படுவதாகவும், இதனால் வடபகுதி மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதுடன், அவர்களின் மீன்பிடி வலைகள் மற்றும் உபகரணங்களும் சேதப்படுத்தப்படுவதாகவும் அவர் கூறினார்.இந்திய மீனவர்களின் பிரச்சினை தொடர்பில் இலங்கை அரசாங்கம் மெத்தனப்போக்குடன் செயற்படுவதாக தமக்கு தென்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.தமிழக அரசாங்கத்திற்கும் இந்த விடயத்தில் முக்கிய பொறுப்பு உள்ளதாக குறிப்பிட்ட அவர், இழுவைமடி மற்றும் ட்ரோலர் முறையிலான மீன்பிடியை கைவிட்டு மாற்றுத் தொழில்களில் ஈடுபடுவதற்கு மீனவர்களை ஊக்குவிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.மாற்றுத் தொழில்களுக்கு மாறுவதற்கான அரசாங்கத் திட்டங்கள் நடைமுறையில் இருந்தபோதிலும், அவற்றை முறையாக ஊக்குவிக்காமல், சட்டவிரோதமான மீன்பிடி முறைகளை தொடர்வதற்கு ஊக்கமளிக்கும் வகையில் சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.இதேவேளை, இலங்கை கடற்பரப்பில் உள்நாட்டு ரீதியாகவும் தடை செய்யப்பட்ட மற்றும் ஒழுங்குபடுத்தப்படாத மீன்பிடி முறைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக என்.எம்.ஆலம் தெரிவித்தார்.குறிப்பாக மன்னார் மாவட்டத்தில் சர்ச்சைக்குரியதாக காணப்படும் சுருக்குவலை மீன்பிடி தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், 2024ஆம் ஆண்டுக்கு முன்னர் 74 மீனவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், 2025ஆம் ஆண்டில் அந்த எண்ணிக்கை 45 ஆகவும், 2026ஆம் ஆண்டில் 30 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.சுருக்குவலை மீன்பிடி முறையை படிப்படியாக குறைத்து எதிர்காலத்தில் முற்றாக இல்லாதொழிக்கும் அரசாங்கத்தின் முயற்சியை வரவேற்பதாகவும், எனினும் தற்போது மீனவர்களுக்கு தெளிவற்ற நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.கடந்த மாதம் மன்னாரில் இடம்பெற்ற மீனவர் அபிவிருத்திக் கூட்டத்தில் இந்த பிரச்சினை தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டதாகவும், ஒரு வார காலத்திற்குள் தீர்வு வழங்கப்படும் என அமைச்சர் உறுதியளித்திருந்த போதிலும், ஒரு மாதம் கடந்தும் அந்த தீர்வு நடைமுறைக்கு வரவில்லை எனவும் என்.எம்.ஆலம் சுட்டிக்காட்டினார்.இதனால் குறித்த விடயம் தொடர்பில் மீனவர்கள் மத்தியில் குழப்பநிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement