• Apr 22 2026

வெலிகம பிரதேச சபை தலைவர் சுட்டுக்கொலை; சந்தேகநபர்கள் விரைவில் கைது - ஆனந்த விஜேபால தெரிவிப்பு!

shanu / Oct 23rd 2025, 2:11 pm
image

வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசிங்கவை சுட்டுக்கொலை செய்த சந்தேகநபர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.


பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற அமர்வில் உரையாற்றுகையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 


வெலிகம பிரதேச சபைக்குள் வைத்து நேற்று சுட்டுக் கொல்லப்பட்ட வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் கொலையில் தொடர்புடைய சந்தேக நபர்கள் குறித்து தகவல் கிடைத்துள்ளது. 


துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்த உடனேயே, சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்துமாறு ஐஜிபி மற்றும் சிஐடிக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 


விசாரணைக்காக 04 பொலிஸ் குழுக்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர்கள் குறித்து தற்போது தகவல் கிடைத்துள்ளது. 


பிரதேச சபை் தலைவரின் படுகொலையுடன்  தொடர்புடைய அனைத்து சந்தேக நபர்களும் அடுத்த 02 முதல் 03 நாட்களுக்குள் கைது செய்யப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.

வெலிகம பிரதேச சபை தலைவர் சுட்டுக்கொலை; சந்தேகநபர்கள் விரைவில் கைது - ஆனந்த விஜேபால தெரிவிப்பு வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசிங்கவை சுட்டுக்கொலை செய்த சந்தேகநபர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற அமர்வில் உரையாற்றுகையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், வெலிகம பிரதேச சபைக்குள் வைத்து நேற்று சுட்டுக் கொல்லப்பட்ட வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் கொலையில் தொடர்புடைய சந்தேக நபர்கள் குறித்து தகவல் கிடைத்துள்ளது. துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்த உடனேயே, சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்துமாறு ஐஜிபி மற்றும் சிஐடிக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. விசாரணைக்காக 04 பொலிஸ் குழுக்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர்கள் குறித்து தற்போது தகவல் கிடைத்துள்ளது. பிரதேச சபை் தலைவரின் படுகொலையுடன்  தொடர்புடைய அனைத்து சந்தேக நபர்களும் அடுத்த 02 முதல் 03 நாட்களுக்குள் கைது செய்யப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement