• May 17 2026

வீரமுனை வரவேற்பு வளைவு விவகாரம்; சம்மாந்துறை நீதவான் நீதிமன்றம் விடுத்த அறிவுறுத்தல்

Aathira / Jan 10th 2026, 12:55 pm
image

சம்மாந்துறை வீரமுனை பிரதேசத்தில் வரவேற்பு வளைவு அமைப்பது தொடர்பாக ஏற்பட்டுள்ள பிணக்கை சமூக பொறுப்புணர்வுடன் இரு தரப்பினரும் தீர்த்துக்கொள்ள வேண்டும் என சம்மாந்துறை நீதவான் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை வீரமுனை பிரதேசத்திற்கான வரவேற்பு வளைவு, பிரதேச சபையின் அனுமதி இன்றி அமைக்க ஆரம்பித்தமை தொடர்பான வழக்கு, வெள்ளிக்கிழமை (9) சம்மாந்துறை நீதவான் நீதிமன்ற நீதிவான் நூர்டீன் முஹம்மட் சர்ஜுன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, இது அதிகார சம்பந்தமான விடயம் அல்ல; சமூகத்துடன் தொடர்புடைய விவகாரம் என்பதைக் குறிப்பிட்ட நீதிவான், இரு சமூகங்களும் ஒன்றிணைந்து சுமூகமான தீர்வை எட்ட வேண்டும் என வலியுறுத்தினார். 

அடுத்த தவணைக்கு முன்னர் இணக்கப்பாட்டிற்கு வர முயற்சிக்க வேண்டும் என இரு தரப்பினருக்கும் நீதிமன்றம் அறிவுறுத்தியது.

இரு தரப்பினரின் வாதப்பிரதிவாதங்களை ஆராய்ந்த நீதிவான், முன்னர் மேற்கொள்ளப்பட்ட இணக்க முயற்சிகளில் தெளிவின்மை காணப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டி, மீண்டும் சமூக பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து, குறித்த வழக்கு எதிர்வரும் 2026 மார்ச் 06 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது. அடுத்த தவணையின் போது, பொதுநலனை கருத்தில் கொண்டு, இரு தரப்பினரும் பாரபட்சமின்றி தீர்மானமான முடிவை அறிவிப்பார்கள் என நீதிமன்றம் எதிர்பார்ப்பதாக தெரிவித்தது.

இந்த வழக்கில் சம்மாந்துறை பிரதேச சபை சார்பில் சட்டத்தரணிகள் பௌஸான் சாமிளா மற்றும் பிரதிவாதிகளான ஆலய நிர்வாகம் சார்பில் தமிழரசுக் கட்சியின் கல்முனை தொகுதி இளைஞர் அணி தலைவர் மற்றும் சட்டத்தரணி அ. நிதான்சன் ஆகியோர் ஆஜராகினர்.

மேலும், கடந்த தவணையில், இரு சமூகங்களும் இணக்கப்பாட்டிற்கு வருமானால் சட்ட அனுமதி வழங்குவதில் தங்களுக்கு எந்த தடையும் இல்லை என பிரதேச சபை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன், அடுத்த தவணைக்கு முன்னர் இரு சமூகங்களும் ஒன்றிணைந்து தீர்வை எட்ட முயற்சி மேற்கொள்ள வேண்டும் என ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.

குறித்த வழக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தாக்கல் செய்யப்பட்டதுடன், ஆரம்ப தவணைகளில் சம்மாந்துறை பிரதேச சபை சார்பில் ஜனாதிபதி  சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் மற்றும் பிரதிவாதிகளான ஆலய நிர்வாகம் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் மற்றும் கனிஷ்ட சட்டத்தரணிகளான சுதர்சன் கமல் பெனிஸ்லஸ் துஷான் அ.நிதான்சன் ஆகியோர் மன்றில் ஆஜராகியிருந்தனர்.

வீரமுனை வரவேற்பு வளைவு விவகாரம்; சம்மாந்துறை நீதவான் நீதிமன்றம் விடுத்த அறிவுறுத்தல் சம்மாந்துறை வீரமுனை பிரதேசத்தில் வரவேற்பு வளைவு அமைப்பது தொடர்பாக ஏற்பட்டுள்ள பிணக்கை சமூக பொறுப்புணர்வுடன் இரு தரப்பினரும் தீர்த்துக்கொள்ள வேண்டும் என சம்மாந்துறை நீதவான் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை வீரமுனை பிரதேசத்திற்கான வரவேற்பு வளைவு, பிரதேச சபையின் அனுமதி இன்றி அமைக்க ஆரம்பித்தமை தொடர்பான வழக்கு, வெள்ளிக்கிழமை (9) சம்மாந்துறை நீதவான் நீதிமன்ற நீதிவான் நூர்டீன் முஹம்மட் சர்ஜுன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.இதன்போது, இது அதிகார சம்பந்தமான விடயம் அல்ல; சமூகத்துடன் தொடர்புடைய விவகாரம் என்பதைக் குறிப்பிட்ட நீதிவான், இரு சமூகங்களும் ஒன்றிணைந்து சுமூகமான தீர்வை எட்ட வேண்டும் என வலியுறுத்தினார். அடுத்த தவணைக்கு முன்னர் இணக்கப்பாட்டிற்கு வர முயற்சிக்க வேண்டும் என இரு தரப்பினருக்கும் நீதிமன்றம் அறிவுறுத்தியது.இரு தரப்பினரின் வாதப்பிரதிவாதங்களை ஆராய்ந்த நீதிவான், முன்னர் மேற்கொள்ளப்பட்ட இணக்க முயற்சிகளில் தெளிவின்மை காணப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டி, மீண்டும் சமூக பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என உத்தரவிட்டார்.இதனைத் தொடர்ந்து, குறித்த வழக்கு எதிர்வரும் 2026 மார்ச் 06 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது. அடுத்த தவணையின் போது, பொதுநலனை கருத்தில் கொண்டு, இரு தரப்பினரும் பாரபட்சமின்றி தீர்மானமான முடிவை அறிவிப்பார்கள் என நீதிமன்றம் எதிர்பார்ப்பதாக தெரிவித்தது.இந்த வழக்கில் சம்மாந்துறை பிரதேச சபை சார்பில் சட்டத்தரணிகள் பௌஸான் சாமிளா மற்றும் பிரதிவாதிகளான ஆலய நிர்வாகம் சார்பில் தமிழரசுக் கட்சியின் கல்முனை தொகுதி இளைஞர் அணி தலைவர் மற்றும் சட்டத்தரணி அ. நிதான்சன் ஆகியோர் ஆஜராகினர்.மேலும், கடந்த தவணையில், இரு சமூகங்களும் இணக்கப்பாட்டிற்கு வருமானால் சட்ட அனுமதி வழங்குவதில் தங்களுக்கு எந்த தடையும் இல்லை என பிரதேச சபை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.இதனிடையே, பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன், அடுத்த தவணைக்கு முன்னர் இரு சமூகங்களும் ஒன்றிணைந்து தீர்வை எட்ட முயற்சி மேற்கொள்ள வேண்டும் என ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.குறித்த வழக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தாக்கல் செய்யப்பட்டதுடன், ஆரம்ப தவணைகளில் சம்மாந்துறை பிரதேச சபை சார்பில் ஜனாதிபதி  சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் மற்றும் பிரதிவாதிகளான ஆலய நிர்வாகம் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் மற்றும் கனிஷ்ட சட்டத்தரணிகளான சுதர்சன் கமல் பெனிஸ்லஸ் துஷான் அ.நிதான்சன் ஆகியோர் மன்றில் ஆஜராகியிருந்தனர்.

Advertisement

Advertisement

Advertisement