• Sep 09 2026

யேமனில் மீண்டும் வெடித்த போர் !

Ziya / Sep 8th 2026, 4:47 pm
image

யேமனின் மாரிப் மாகாணத்தில் உள்ள அல்-ஜுபா மாவட்டத்தில் சவூதி அரேபியா புதிய வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாக ஹூத்தி ஆதரவு ஊடகங்கள் குற்றம்சாட்டியுள்ளன. 


சமீபத்திய தாக்குதல்கள் ஹூத்திகள் கட்டுப்பாட்டில் உள்ளதாகக் கூறப்படும் பகுதிகளை இலக்காகக் கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


எனினும்,தாக்குதல்களில் உயிரிழப்புகள் அல்லது சேதங்கள் ஏற்பட்டதா என்பது குறித்தும் முழுமையான விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.


இதற்கிடையில், யேமனில் நீண்டகாலமாக நீடித்திருந்த மோதல்கள் மீண்டும் தீவிரமடைந்து வருகின்றன. 


2014-ல் தீவிரமடைந்த யேமன் உள்நாட்டுப் போர், 2022-ல் ஏற்பட்ட தற்காலிக அமைதிக்குப் பின்னர் சில ஆண்டுகள் ஒப்பீட்டளவில் தணிந்திருந்தது. தற்போது ஹூத்திகள் மற்றும் சவூதி ஆதரவு யேமன் அரசுப் படைகளுக்கு இடையிலான மோதல்கள் மீண்டும் அதிகரித்து வருவது, பிராந்தியத்தில் பதற்றத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.

யேமனில் மீண்டும் வெடித்த போர் யேமனின் மாரிப் மாகாணத்தில் உள்ள அல்-ஜுபா மாவட்டத்தில் சவூதி அரேபியா புதிய வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாக ஹூத்தி ஆதரவு ஊடகங்கள் குற்றம்சாட்டியுள்ளன. சமீபத்திய தாக்குதல்கள் ஹூத்திகள் கட்டுப்பாட்டில் உள்ளதாகக் கூறப்படும் பகுதிகளை இலக்காகக் கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.எனினும்,தாக்குதல்களில் உயிரிழப்புகள் அல்லது சேதங்கள் ஏற்பட்டதா என்பது குறித்தும் முழுமையான விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.இதற்கிடையில், யேமனில் நீண்டகாலமாக நீடித்திருந்த மோதல்கள் மீண்டும் தீவிரமடைந்து வருகின்றன. 2014-ல் தீவிரமடைந்த யேமன் உள்நாட்டுப் போர், 2022-ல் ஏற்பட்ட தற்காலிக அமைதிக்குப் பின்னர் சில ஆண்டுகள் ஒப்பீட்டளவில் தணிந்திருந்தது. தற்போது ஹூத்திகள் மற்றும் சவூதி ஆதரவு யேமன் அரசுப் படைகளுக்கு இடையிலான மோதல்கள் மீண்டும் அதிகரித்து வருவது, பிராந்தியத்தில் பதற்றத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement