• Aug 21 2026

வெடுக்குநாறி மலை பொங்கல் விழா: பக்தர்களின் வழிபாடு தொடர்பில் விசேட கலந்துரையாடல்

Chithra / Aug 21st 2026, 11:43 am
image



வவுனியா மாவட்டத்தில் தொல்பொருள் பெறுமதிமிக்க இடங்களில் அமைந்துள்ள வழிபாட்டுத் தலங்களில் பக்தர்கள் வழிபாடுகளில் ஈடுபடும்போது ஏற்படும் பிரச்சினைகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல் ஒன்று நேற்று (20) வவுனியா மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.


கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க மற்றும் வவுனியா மாவட்ட செயலாளர் பி.ஏ. சரத் சந்திர ஆகியோரின் தலைமையில் இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றது.


வவுனியா, நெடுங்கேணி நைனாமடு காட்டுப் பகுதியில் அமைந்துள்ள வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய வருடாந்த பொங்கல் விழாவின் போது பக்தர்களுக்கு ஏற்படக்கூடிய சட்டரீதியான தடைகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.


நூற்றாண்டுகள் பழமையான இந்தத் தொல்பொருள் மையத்திற்கு பல்வேறு தரப்பினரும் வருகை தந்து வழிபாடுகளில் ஈடுபடுவதால் தொல்பொருள் இடங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.


எனவே, தொல்பொருள் பெறுமதிமிக்க இடங்களுக்கு எவ்வித சேதமும் ஏற்படாத வகையில் வழிபாடுகளை முன்னெடுக்குமாறு வெடுக்குநாரிமலை கோவில் நிர்வாகத்தினருக்கு அறிவுறுத்தப்பட்டது.


மேலும், வடக்கு மற்றும் தெற்கில் இருந்து வருகை தரும் சில தரப்பினர் வவுனியாவில் தமிழ் மற்றும் சிங்கள மக்களிடையே நிலவும் நல்லிணக்கத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயற்படுவதாக பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டினார்.


இதனால், தொல்பொருள் மையங்களை பாதுகாத்து, அமைதியான முறையில் வழிபாடுகளை மேற்கொள்ளுமாறு மக்களிடம் அவர் கேட்டுக்கொண்டார்.


தொல்பொருள் மையங்கள் தமிழ் அல்லது சிங்கள மக்களுக்கு என தனித்தனியாகப் பிரிக்கப்படவில்லை எனத் தெரிவித்த பிரதி அமைச்சர், அவற்றை பாதுகாப்பது அனைவரினதும் பொறுப்பு என்றும் வலியுறுத்தினார்.


இந்தக் கலந்துரையாடலில் வவுனியா மற்றும் மன்னார் பிராந்தியத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் இந்திக ஹபுகொட, வவுனியா, மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு பொறுப்பான தொல்பொருள் ஆராய்ச்சி அதிகாரி விக்ரமசிறி பியதாச, மேலதிக மாவட்ட செயலாளர் ந. கமலதாசன் உள்ளிட்ட அரச அதிகாரிகளும், வெடுக்குநாரிமலை கோவில் தலைவர் வி. பூபாலசிங்கம் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

வெடுக்குநாறி மலை பொங்கல் விழா: பக்தர்களின் வழிபாடு தொடர்பில் விசேட கலந்துரையாடல் வவுனியா மாவட்டத்தில் தொல்பொருள் பெறுமதிமிக்க இடங்களில் அமைந்துள்ள வழிபாட்டுத் தலங்களில் பக்தர்கள் வழிபாடுகளில் ஈடுபடும்போது ஏற்படும் பிரச்சினைகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல் ஒன்று நேற்று (20) வவுனியா மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க மற்றும் வவுனியா மாவட்ட செயலாளர் பி.ஏ. சரத் சந்திர ஆகியோரின் தலைமையில் இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றது.வவுனியா, நெடுங்கேணி நைனாமடு காட்டுப் பகுதியில் அமைந்துள்ள வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய வருடாந்த பொங்கல் விழாவின் போது பக்தர்களுக்கு ஏற்படக்கூடிய சட்டரீதியான தடைகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.நூற்றாண்டுகள் பழமையான இந்தத் தொல்பொருள் மையத்திற்கு பல்வேறு தரப்பினரும் வருகை தந்து வழிபாடுகளில் ஈடுபடுவதால் தொல்பொருள் இடங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.எனவே, தொல்பொருள் பெறுமதிமிக்க இடங்களுக்கு எவ்வித சேதமும் ஏற்படாத வகையில் வழிபாடுகளை முன்னெடுக்குமாறு வெடுக்குநாரிமலை கோவில் நிர்வாகத்தினருக்கு அறிவுறுத்தப்பட்டது.மேலும், வடக்கு மற்றும் தெற்கில் இருந்து வருகை தரும் சில தரப்பினர் வவுனியாவில் தமிழ் மற்றும் சிங்கள மக்களிடையே நிலவும் நல்லிணக்கத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயற்படுவதாக பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டினார்.இதனால், தொல்பொருள் மையங்களை பாதுகாத்து, அமைதியான முறையில் வழிபாடுகளை மேற்கொள்ளுமாறு மக்களிடம் அவர் கேட்டுக்கொண்டார்.தொல்பொருள் மையங்கள் தமிழ் அல்லது சிங்கள மக்களுக்கு என தனித்தனியாகப் பிரிக்கப்படவில்லை எனத் தெரிவித்த பிரதி அமைச்சர், அவற்றை பாதுகாப்பது அனைவரினதும் பொறுப்பு என்றும் வலியுறுத்தினார்.இந்தக் கலந்துரையாடலில் வவுனியா மற்றும் மன்னார் பிராந்தியத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் இந்திக ஹபுகொட, வவுனியா, மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு பொறுப்பான தொல்பொருள் ஆராய்ச்சி அதிகாரி விக்ரமசிறி பியதாச, மேலதிக மாவட்ட செயலாளர் ந. கமலதாசன் உள்ளிட்ட அரச அதிகாரிகளும், வெடுக்குநாரிமலை கோவில் தலைவர் வி. பூபாலசிங்கம் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement