• Sep 10 2026

வவுனியா மாநகர முதல்வர் பதவி நீக்கம் இடைக்காலத் தடையுத்தரவு 23ஆம் திகதி வரை நீடிப்பு

dorin / Sep 9th 2026, 2:03 pm
image

வவுனியா மாநகரமுதல்வரை பதவிநீக்கி ஆளுநர் வெளியிட்ட வர்த்தமானி மீதான இடைக்கால தடைக்கட்டளையினை இம்மாதம் 23 ஆம் திகதிவரை நீடித்து வவுனியா மேல்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

எதிர்மனுதாரர் தரப்பு சட்டத்தரணியால்(அரசதரப்பு) எழுத்துமூல சமர்ப்பணங்களை வழங்க அவகாசம் கோரிமையால் இந்த இரண்டு வாரம் காலஅவகாசம் மன்றால் வழங்கப்பட்டுள்ளது.

வவுனியா மாநகர முதல்வரை பதவி நீக்கியதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட எழுத்தாணை விண்ணப்பம் வவுனியா மேல்நீதிமன்றில் இன்று எடுத்துக்கொள்ளப்பட்டது. 

குறித்த விண்ணப்பத்தில் மாநகர முதல்வர் மீதான இடைக்காலத் தடையை நீடிப்பதா அல்லது அதனை விலக்குவதா என்பது தொடர்பாக கடந்த தவணையில் நீண்ட விவாதம் இடம்பெற்றிருந்தது. 

அந்த வகையில் இருதரப்பு விவாதங்களையும் எழுத்துமூல சமர்ப்பணமாக வழங்குமாறும்

அதனை கடந்த28 ஆம் திகதி அன்றோ அல்லது அதற்கு முன்னதாகவோ தாக்கல் செய்ய வேண்டும் என்றும் கடந்ததவணை வழங்கப்பட்ட உத்தரவில் குறிப்பிடப்பட்டிருந்தது. 

அதன்படி மனுதாரர் சார்பில் எழுத்துமூல சமர்ப்பணங்கள் மன்றுக்கு சமர்ப்பிக்கப்பட்டது. 

எனினும் எதிர்மனுதாரர் தரப்பு சட்டத்தரணியால் எழுத்துமூல சமர்ப்பணங்களை வழங்க அவகாசம் கோரிமையால் இந்த இரண்டு வாரம் காலஅவகாசம் மன்றால் இன்றையதினம் வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் முதல்வரை பதவி நீக்கி ஆளுநர் வெளியிட்ட வர்த்தமானி மீதான இடைக்காலத் தடைக்கட்டளை இம் மாதம் 23ஆம் திகதி வரை மன்றால் நீடிக்கப்பட்டிருக்கிறது.

மனுதாரர் சார்பில் சட்டத்தரணி இ.தயாபரன் இன்று நீதிமன்றில் ஆஜராகியிருந்தார்.

வவுனியா மாநகர முதல்வர் பதவி நீக்கம் இடைக்காலத் தடையுத்தரவு 23ஆம் திகதி வரை நீடிப்பு வவுனியா மாநகரமுதல்வரை பதவிநீக்கி ஆளுநர் வெளியிட்ட வர்த்தமானி மீதான இடைக்கால தடைக்கட்டளையினை இம்மாதம் 23 ஆம் திகதிவரை நீடித்து வவுனியா மேல்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.எதிர்மனுதாரர் தரப்பு சட்டத்தரணியால்(அரசதரப்பு) எழுத்துமூல சமர்ப்பணங்களை வழங்க அவகாசம் கோரிமையால் இந்த இரண்டு வாரம் காலஅவகாசம் மன்றால் வழங்கப்பட்டுள்ளது.வவுனியா மாநகர முதல்வரை பதவி நீக்கியதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட எழுத்தாணை விண்ணப்பம் வவுனியா மேல்நீதிமன்றில் இன்று எடுத்துக்கொள்ளப்பட்டது. குறித்த விண்ணப்பத்தில் மாநகர முதல்வர் மீதான இடைக்காலத் தடையை நீடிப்பதா அல்லது அதனை விலக்குவதா என்பது தொடர்பாக கடந்த தவணையில் நீண்ட விவாதம் இடம்பெற்றிருந்தது. அந்த வகையில் இருதரப்பு விவாதங்களையும் எழுத்துமூல சமர்ப்பணமாக வழங்குமாறும்அதனை கடந்த28 ஆம் திகதி அன்றோ அல்லது அதற்கு முன்னதாகவோ தாக்கல் செய்ய வேண்டும் என்றும் கடந்ததவணை வழங்கப்பட்ட உத்தரவில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதன்படி மனுதாரர் சார்பில் எழுத்துமூல சமர்ப்பணங்கள் மன்றுக்கு சமர்ப்பிக்கப்பட்டது. எனினும் எதிர்மனுதாரர் தரப்பு சட்டத்தரணியால் எழுத்துமூல சமர்ப்பணங்களை வழங்க அவகாசம் கோரிமையால் இந்த இரண்டு வாரம் காலஅவகாசம் மன்றால் இன்றையதினம் வழங்கப்பட்டுள்ளது.அத்துடன் முதல்வரை பதவி நீக்கி ஆளுநர் வெளியிட்ட வர்த்தமானி மீதான இடைக்காலத் தடைக்கட்டளை இம் மாதம் 23ஆம் திகதி வரை மன்றால் நீடிக்கப்பட்டிருக்கிறது.மனுதாரர் சார்பில் சட்டத்தரணி இ.தயாபரன் இன்று நீதிமன்றில் ஆஜராகியிருந்தார்.

Advertisement

Advertisement

Advertisement