மாணவர்களை ஏற்றிச்சென்ற பாடசாலை வான் ஒன்று பேருந்துடன் மோதி விபத்திற்குள்ளானதில் நால்வர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து கொழும்பு, வோக்ஸ்ஹால் வீதியில் இன்று (30) காலை இடம்பெற்றுள்ளது.
பாடசாலை மாணவர்களை ஏற்றிக் கொண்டு பயணித்த வான் ஒன்று அதே வீதியில் பயணித்த பேருந்துடன் மோதியதில் விபத்து சம்பவித்துள்ளது.
விபத்தில் பாடசாலை வான் சாரதி மற்றும் மூன்று மாணவர்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
விபத்தின் போது பேருந்தும் பாடசாலை வானும் பலத்த சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
விபத்து தொடர்பான விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
மாணவர்கள் சென்ற வான் பேருந்துடன் மோதி விபத்து; மாணவர்கள் மூவர் உட்பட நால்வர் வைத்தியசாலையில் மாணவர்களை ஏற்றிச்சென்ற பாடசாலை வான் ஒன்று பேருந்துடன் மோதி விபத்திற்குள்ளானதில் நால்வர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து கொழும்பு, வோக்ஸ்ஹால் வீதியில் இன்று (30) காலை இடம்பெற்றுள்ளது. பாடசாலை மாணவர்களை ஏற்றிக் கொண்டு பயணித்த வான் ஒன்று அதே வீதியில் பயணித்த பேருந்துடன் மோதியதில் விபத்து சம்பவித்துள்ளது. விபத்தில் பாடசாலை வான் சாரதி மற்றும் மூன்று மாணவர்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.விபத்தின் போது பேருந்தும் பாடசாலை வானும் பலத்த சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. விபத்து தொடர்பான விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.