• May 18 2026

'தீராத வடு' - கண்ணீரில் நனைந்த முள்ளிவாய்க்கால் மண்

Chithra / May 18th 2026, 11:51 am
image

தமிழினப் படுகொலையின் 17ஆவது நினைவு தினம் தற்போது முள்ளிவாய்க்கால் மண்ணில் உணர்வுபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 


இறுதி யுத்தத்தின் கோரங்களை அமைதியாய் சுமந்து நிற்கும் முள்ளிவாய்க்கால் மண்ணில்   பொதுச் சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, மதகுருமார்கள் உள்ளிட்ட பலரும் பொதுச் சுடரின் கீழ் விழுந்து வணங்கி,  உயிரிழந்தவர்களை அஞ்சலித்து வருகின்றனர். 


இறுதி யுத்தத்தில் உயிர் நீத்த தமது உறவுகளின் புகைப்படங்களோடும், அவர்களுக்குப் பிடித்த உணவுகளோடும் அவர்களை அஞ்சலிக்க முள்ளிவாய்க்கால் மண்ணில் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டுள்ளனர். 


வவுனியா


இதேவேளை இறுதி யுத்தத்தில் மரணித்தவர்களை நினைவு கூரும் முள்ளிவாய்க்கால் நினைவு நாளான இன்று வடக்கு கிழக்கில் பல்வேறு இடங்களிலும் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.


அந்த வகையில் வவுனியாவிலும் அஞ்சலி நிகழ்வுகள் இடம் பெற்றிருந்தன.


வவுனியா மாவட்ட அந்தணர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் வவுனியா குருமன்காடு பிள்ளையார் ஆலயத்தில் முள்ளிவாய்க்கால் அஞ்சலி நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.


நிகழ்வில் பொதுமக்கள், அடியார்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு போரில் உயிரிழந்த மக்களுக்கு தீபமேற்றி ஆத்மசாந்தி வழிபாடுகளில் ஈடுபட்டனர்.

 


மட்டக்களப்பு 


இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டம் குருமண்வெளியில் இன்றையதினம் (18.05.2026) முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி, சிரட்டைகளில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.


இலங்கை தமிழரசு கட்சியின் குருமண்வெளி வட்டார கிளையின் ஏற்பாட்டில் பிரதேச சபை உறுப்பினர் பத்மதேபு தலைமையில் இந் நிகழ்வு நடைபெற்றது.


இதன் போது இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ், உப தவிசாளர் அ.வசீகரன் , போரதீவுபற்று பிரதேச சபையின் உப தவிசாளர் கயசீலன் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள், பொதுமக்கள், எனப்பலரும் கலந்து கொண்டனர்.


 கிளிநொச்சி


கிளிநொச்சி நகரில் அனைத்து வர்த்தக செயற்பாடுகளும் மூடப்பட்டதுடன், முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வுகள் இன்று  நடைபெற்றது வருகின்றது. முடிகண்டி பிள்ளையார் ஆலயம் முன்பாக குறித்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.


மன்னாரில்


முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 17ஆம் ஆண்டு நினைவு தினமான இன்று திங்கட்கிழமை(18) மன்னாரிலும் நினைவேந்தல் இடம் பெற்றது.


தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி. எஸ். சிவகரன்  தலைமையில் இன்று திங்கட்கிழமை (18) காலை மன்னார் நகர பகுதியில் உள்ள தந்தை செல்வா சிலைக்கு முன்பாக இடம் பெற்றது.


இதன் போது  முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த உறவுகளை நினைவு கூர்ந்து பொதுச் சுடர் ஏற்றப்பட்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.அதனை தொடர்ந்து முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கி வைக்கப்பட்டது.


குறித்த  நினைவேந்தல் நிகழ்வில் மனித உரிமைகள் செயற்பாட்டாளர் அருட்தந்தை ஜெயபாலன் குரூஸ் அடிகளார்,மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா,அரசியல் பிரதிநிதிகள்,பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். 


கல்முனை


கல்முனை மாநகரத்திற்கு உட்பட்ட பாண்டிருப்பில் பகுதியில் இன்று (18) முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.


முள்ளிவாய்க்கால் போரில் உயிரிழந்த மக்களை நினைவு கூறும் நோக்கில் நடைபெற்ற இந்த நிகழ்வில்  பொதுமக்களுக்கு கஞ்சி வழங்கப்பட்டதுடன்  உயிர்நீத்தோருக்கான அஞ்சலியும் செலுத்தப்பட்டது.


இந்நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள்  முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் துஷானந்தன் தலைமையில்  தமிழ் தேசிய மக்கள்  முன்னணியின் உறுப்பினர்கள் மற்றும் பல பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


'தீராத வடு' - கண்ணீரில் நனைந்த முள்ளிவாய்க்கால் மண் தமிழினப் படுகொலையின் 17ஆவது நினைவு தினம் தற்போது முள்ளிவாய்க்கால் மண்ணில் உணர்வுபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இறுதி யுத்தத்தின் கோரங்களை அமைதியாய் சுமந்து நிற்கும் முள்ளிவாய்க்கால் மண்ணில்   பொதுச் சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, மதகுருமார்கள் உள்ளிட்ட பலரும் பொதுச் சுடரின் கீழ் விழுந்து வணங்கி,  உயிரிழந்தவர்களை அஞ்சலித்து வருகின்றனர். இறுதி யுத்தத்தில் உயிர் நீத்த தமது உறவுகளின் புகைப்படங்களோடும், அவர்களுக்குப் பிடித்த உணவுகளோடும் அவர்களை அஞ்சலிக்க முள்ளிவாய்க்கால் மண்ணில் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டுள்ளனர். வவுனியாஇதேவேளை இறுதி யுத்தத்தில் மரணித்தவர்களை நினைவு கூரும் முள்ளிவாய்க்கால் நினைவு நாளான இன்று வடக்கு கிழக்கில் பல்வேறு இடங்களிலும் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.அந்த வகையில் வவுனியாவிலும் அஞ்சலி நிகழ்வுகள் இடம் பெற்றிருந்தன.வவுனியா மாவட்ட அந்தணர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் வவுனியா குருமன்காடு பிள்ளையார் ஆலயத்தில் முள்ளிவாய்க்கால் அஞ்சலி நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.நிகழ்வில் பொதுமக்கள், அடியார்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு போரில் உயிரிழந்த மக்களுக்கு தீபமேற்றி ஆத்மசாந்தி வழிபாடுகளில் ஈடுபட்டனர். மட்டக்களப்பு இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டம் குருமண்வெளியில் இன்றையதினம் (18.05.2026) முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி, சிரட்டைகளில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.இலங்கை தமிழரசு கட்சியின் குருமண்வெளி வட்டார கிளையின் ஏற்பாட்டில் பிரதேச சபை உறுப்பினர் பத்மதேபு தலைமையில் இந் நிகழ்வு நடைபெற்றது.இதன் போது இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ், உப தவிசாளர் அ.வசீகரன் , போரதீவுபற்று பிரதேச சபையின் உப தவிசாளர் கயசீலன் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள், பொதுமக்கள், எனப்பலரும் கலந்து கொண்டனர். கிளிநொச்சிகிளிநொச்சி நகரில் அனைத்து வர்த்தக செயற்பாடுகளும் மூடப்பட்டதுடன், முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வுகள் இன்று  நடைபெற்றது வருகின்றது. முடிகண்டி பிள்ளையார் ஆலயம் முன்பாக குறித்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.மன்னாரில்முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 17ஆம் ஆண்டு நினைவு தினமான இன்று திங்கட்கிழமை(18) மன்னாரிலும் நினைவேந்தல் இடம் பெற்றது.தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி. எஸ். சிவகரன்  தலைமையில் இன்று திங்கட்கிழமை (18) காலை மன்னார் நகர பகுதியில் உள்ள தந்தை செல்வா சிலைக்கு முன்பாக இடம் பெற்றது.இதன் போது  முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த உறவுகளை நினைவு கூர்ந்து பொதுச் சுடர் ஏற்றப்பட்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.அதனை தொடர்ந்து முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கி வைக்கப்பட்டது.குறித்த  நினைவேந்தல் நிகழ்வில் மனித உரிமைகள் செயற்பாட்டாளர் அருட்தந்தை ஜெயபாலன் குரூஸ் அடிகளார்,மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா,அரசியல் பிரதிநிதிகள்,பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். கல்முனைகல்முனை மாநகரத்திற்கு உட்பட்ட பாண்டிருப்பில் பகுதியில் இன்று (18) முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.முள்ளிவாய்க்கால் போரில் உயிரிழந்த மக்களை நினைவு கூறும் நோக்கில் நடைபெற்ற இந்த நிகழ்வில்  பொதுமக்களுக்கு கஞ்சி வழங்கப்பட்டதுடன்  உயிர்நீத்தோருக்கான அஞ்சலியும் செலுத்தப்பட்டது.இந்நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள்  முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் துஷானந்தன் தலைமையில்  தமிழ் தேசிய மக்கள்  முன்னணியின் உறுப்பினர்கள் மற்றும் பல பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement