• May 05 2026

முத்துஐயன்கட்டு இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு தொடர்பில் ஆராய இரு விசேட பொலிஸ் குழுக்கள்

Chithra / Aug 18th 2025, 8:19 am
image


ஒட்டுச்சுட்டான் - முத்துஐயன்கட்டு இளம் குடும்பஸ்தர் உயிரிழந்தமை தொடர்பில் இரு விசேட பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றன என பொலிஸ் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சர் எப்.யூ.வூட்லர் தெரிவித்தார். 

நேற்று கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் அவர்  தெரிவித்தார். 

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

சம்பவம் தொடர்பில் இதுவரையில் 3 இராணுவ சிப்பாய்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் இருவர் கொள்ளையிடுவதற்கு ஒத்துழைப்புக்களை வழங்கிய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். தாக்குதலை மேற்கொண்டு காயப்படுத்திய குற்றச்சாட்டில் மற்றைய சிப்பாய் கைது செய்யப்பட்டுள்ளார்.

முகாமுக்குள் உட்பிரவேசிக்க முயன்ற சிவில் பிரஜைகளிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களின் அடிப்படையிலேயே குறித்த இராணுவ சிப்பாய்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

எவ்வாறிருப்பினும் இதனை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக, கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களை அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்துவதற்கு நீதிமன்றத்திடம் அனுமதி கோரப்பட்டுள்ளது என்றார்.

முத்துஐயன்கட்டு இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு தொடர்பில் ஆராய இரு விசேட பொலிஸ் குழுக்கள் ஒட்டுச்சுட்டான் - முத்துஐயன்கட்டு இளம் குடும்பஸ்தர் உயிரிழந்தமை தொடர்பில் இரு விசேட பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றன என பொலிஸ் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சர் எப்.யூ.வூட்லர் தெரிவித்தார். நேற்று கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் அவர்  தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,சம்பவம் தொடர்பில் இதுவரையில் 3 இராணுவ சிப்பாய்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.அவர்களில் இருவர் கொள்ளையிடுவதற்கு ஒத்துழைப்புக்களை வழங்கிய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். தாக்குதலை மேற்கொண்டு காயப்படுத்திய குற்றச்சாட்டில் மற்றைய சிப்பாய் கைது செய்யப்பட்டுள்ளார்.முகாமுக்குள் உட்பிரவேசிக்க முயன்ற சிவில் பிரஜைகளிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களின் அடிப்படையிலேயே குறித்த இராணுவ சிப்பாய்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.எவ்வாறிருப்பினும் இதனை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக, கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களை அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்துவதற்கு நீதிமன்றத்திடம் அனுமதி கோரப்பட்டுள்ளது என்றார்.

Advertisement

Advertisement

Advertisement