• Apr 21 2026

மட்டக்களப்பில் மின்சாரம் தாக்கியதில் இருவர் பலி

Chithra / Jan 29th 2026, 8:26 pm
image

 


மட்டக்களப்பு - ஏறாவூர்ப்பற்று பிரதேசத்துக்குட்பட்ட பன்குடாவெளி புலையவெளியில் இன்று (29) காலை யானை வேலி மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழந்துள்ளதாக கரடியானாறு பொலிஸார் தெரிவித்தனர்.


பன்குடாவெளி புலையவெளியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான  48 வயதுடைய செல்வம் கர்ணன் மற்றும் 

ஏறாவூர் 5ஆம் குறிச்சி வெற்றிவேல் வீதியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தாயான  43 வயதுடைய தமிழ்ச்செல்வி செல்வகுமார் ஆகிய இருவரும் உயிரிழந்துள்ளதாக அவர்களது உறவினர்கள் அடையாளம் காண்பித்துள்ளனர்.


சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது - 


தமிழ்ச்செல்வி செல்வகுமார் மற்றும் உயிரிழந்தவரது மனைவியான ஆறுமுகம் மணியம்மா ஆகியோர் காலை மீன் வாங்குவதற்காக புலையவெளி ஆற்றுக்குச் செல்லும் வேளையில் பள்ளத்துவட்டை வயல் பகுதியில் நில மட்டத்தில் இருந்த யானை வேலி கம்பியிலிருந்து வந்த மின்சாரம் தாக்கியுள்ளது.  


மின்சார அதிர்ச்சியில் தமிழ்ச்செல்வி செல்வகுமார் நீர் உள்ள பகுதியிலும் இறந்தவரது மனைவி மேட்டு நிலப் பகுதியிலும் வீழ்ந்துள்ளனர். 


நீரில் வீழ்ந்தவரை காப்பாற்றுமாறு ஆறுமுகம் மணியம்மா ஆற்றங்கரையில் நின்ற தனது கணவரை அழைத்துள்ளார்.


தமிழ்ச்செல்வி செல்வகுமாரை நீருக்குள் இறங்கி செல்வம் கர்ணன் காப்பாற்ற முயற்சித்தபோது அவரையும் மின்சாரம் தாகியுள்ளது.


உடனடியாக அயலவர்கள் மின்சார வேலிக்கு வழங்கப்பட்ட மின்சாரத்தை துண்டித்து இருவரையும் முச்சக்கரவண்டியில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிழந்துள்ளனர்.


சடலம் செங்கலடி பிரதேச வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக கரடியனாறு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


மட்டக்களப்பில் மின்சாரம் தாக்கியதில் இருவர் பலி  மட்டக்களப்பு - ஏறாவூர்ப்பற்று பிரதேசத்துக்குட்பட்ட பன்குடாவெளி புலையவெளியில் இன்று (29) காலை யானை வேலி மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழந்துள்ளதாக கரடியானாறு பொலிஸார் தெரிவித்தனர்.பன்குடாவெளி புலையவெளியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான  48 வயதுடைய செல்வம் கர்ணன் மற்றும் ஏறாவூர் 5ஆம் குறிச்சி வெற்றிவேல் வீதியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தாயான  43 வயதுடைய தமிழ்ச்செல்வி செல்வகுமார் ஆகிய இருவரும் உயிரிழந்துள்ளதாக அவர்களது உறவினர்கள் அடையாளம் காண்பித்துள்ளனர்.சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது - தமிழ்ச்செல்வி செல்வகுமார் மற்றும் உயிரிழந்தவரது மனைவியான ஆறுமுகம் மணியம்மா ஆகியோர் காலை மீன் வாங்குவதற்காக புலையவெளி ஆற்றுக்குச் செல்லும் வேளையில் பள்ளத்துவட்டை வயல் பகுதியில் நில மட்டத்தில் இருந்த யானை வேலி கம்பியிலிருந்து வந்த மின்சாரம் தாக்கியுள்ளது.  மின்சார அதிர்ச்சியில் தமிழ்ச்செல்வி செல்வகுமார் நீர் உள்ள பகுதியிலும் இறந்தவரது மனைவி மேட்டு நிலப் பகுதியிலும் வீழ்ந்துள்ளனர். நீரில் வீழ்ந்தவரை காப்பாற்றுமாறு ஆறுமுகம் மணியம்மா ஆற்றங்கரையில் நின்ற தனது கணவரை அழைத்துள்ளார்.தமிழ்ச்செல்வி செல்வகுமாரை நீருக்குள் இறங்கி செல்வம் கர்ணன் காப்பாற்ற முயற்சித்தபோது அவரையும் மின்சாரம் தாகியுள்ளது.உடனடியாக அயலவர்கள் மின்சார வேலிக்கு வழங்கப்பட்ட மின்சாரத்தை துண்டித்து இருவரையும் முச்சக்கரவண்டியில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிழந்துள்ளனர்.சடலம் செங்கலடி பிரதேச வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக கரடியனாறு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement