• Apr 18 2026

இலங்கையில் இரண்டு புதிய மாதுளை வகைகள்; சோதனை வெற்றி

Chithra / Oct 2nd 2025, 6:46 pm
image


விவசாயத் திணைக்களத்தின் மேற்பார்வையின் கீழ் சோதனை செய்யப்பட்ட இரண்டு புதிய மாதுளை வகைகள் வெற்றிகரமான முடிவுகளைத் தந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

'மலி பிங்க்' மற்றும் 'லங்கா ரெட்' எனப் பெயரிடப்பட்ட இந்த மாதுளை வகைகள், அம்பலாந்தோட்டை ருஹுணு தாவர நர்சரியின் கீழ் சோதிக்கப்பட்டன. 

விவசாயத் திணைக்களத்தின் உதவி விவசாய பணிப்பாளர் (ஆராய்ச்சி) எல். ஜி. ஐ. சமன்மாலியால் விவசாய அமைச்சு மற்றும் விவசாயத் திணைக்களத்தின் தேசிய விவசாயக் கொள்கை சபையின் விதிகளின்படி  இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இந்த மாதுளை வகைகளை ஹம்பாந்தோட்டை உள்ளிட்ட பல பகுதிகளில் பயிரிட முடியும் என்று கண்டறியப்பட்டுள்ளது. 

இந்த இரண்டு புதிய மாதுளை வகைகளையும் நாட்டில் பயிரிடுவதால், இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் மாதுளைகளின் அளவைக் குறைக்க முடியும் என கூறப்படுகிறது. 

அத்துடன் இந்த மாதுளைகளை வெளிநாட்டு சந்தைகளுக்கு அனுப்புவதன் மூலம் அந்நிய செலாவணியை ஈட்டும் திறன் இருப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் இரண்டு புதிய மாதுளை வகைகள்; சோதனை வெற்றி விவசாயத் திணைக்களத்தின் மேற்பார்வையின் கீழ் சோதனை செய்யப்பட்ட இரண்டு புதிய மாதுளை வகைகள் வெற்றிகரமான முடிவுகளைத் தந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 'மலி பிங்க்' மற்றும் 'லங்கா ரெட்' எனப் பெயரிடப்பட்ட இந்த மாதுளை வகைகள், அம்பலாந்தோட்டை ருஹுணு தாவர நர்சரியின் கீழ் சோதிக்கப்பட்டன. விவசாயத் திணைக்களத்தின் உதவி விவசாய பணிப்பாளர் (ஆராய்ச்சி) எல். ஜி. ஐ. சமன்மாலியால் விவசாய அமைச்சு மற்றும் விவசாயத் திணைக்களத்தின் தேசிய விவசாயக் கொள்கை சபையின் விதிகளின்படி  இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த மாதுளை வகைகளை ஹம்பாந்தோட்டை உள்ளிட்ட பல பகுதிகளில் பயிரிட முடியும் என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த இரண்டு புதிய மாதுளை வகைகளையும் நாட்டில் பயிரிடுவதால், இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் மாதுளைகளின் அளவைக் குறைக்க முடியும் என கூறப்படுகிறது. அத்துடன் இந்த மாதுளைகளை வெளிநாட்டு சந்தைகளுக்கு அனுப்புவதன் மூலம் அந்நிய செலாவணியை ஈட்டும் திறன் இருப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement