• May 06 2026

இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து; சாரதி ஒருவர் பலி

Chithra / Feb 24th 2026, 12:19 pm
image


 

வாத்துவ, மொரந்துடுவ வீதியில் மெலேகம பகுதியில் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த பேருந்து ஒன்றின் சாரதி உயிரிழந்தார். 


இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் இன்று (24) காலை இந்த விபத்து இடம்பெற்றது.


இதில் இரண்டு பேருந்து சாரதிகளும் காயமடைந்து பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். 


பேருந்து ஒன்று மற்றொரு வாகனத்தை முந்திச் செல்ல முயன்றபோது இந்த விபத்து இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். 


விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் இரு பஸ்களிலும் பயணிகள் எவரும் இருக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. 


எவ்வாறாயினும், இந்த விபத்து காரணமாக பாணந்துறை - மொரொந்துடுவ வீதி, மெலேகம பகுதியில் தடைப்பட்டிருந்ததுடன், போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்பட்டது. 


விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வாத்துவ பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து; சாரதி ஒருவர் பலி  வாத்துவ, மொரந்துடுவ வீதியில் மெலேகம பகுதியில் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த பேருந்து ஒன்றின் சாரதி உயிரிழந்தார். இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் இன்று (24) காலை இந்த விபத்து இடம்பெற்றது.இதில் இரண்டு பேருந்து சாரதிகளும் காயமடைந்து பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். பேருந்து ஒன்று மற்றொரு வாகனத்தை முந்திச் செல்ல முயன்றபோது இந்த விபத்து இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் இரு பஸ்களிலும் பயணிகள் எவரும் இருக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறாயினும், இந்த விபத்து காரணமாக பாணந்துறை - மொரொந்துடுவ வீதி, மெலேகம பகுதியில் தடைப்பட்டிருந்ததுடன், போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்பட்டது. விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வாத்துவ பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement