• Jul 16 2026

மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் போதைப்பொருளுடன் இருவர் கைது!

shanu / Jul 15th 2026, 10:08 am
image

மஸ்கெலியா பொலிஸ் பிரிவில்  போதைப் பொருளுடன் இருவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.


மஸ்கெலியா நல்லதண்ணி பிரதான சாலையில் புரவுன்லோ தோட்ட பால் சேகரிப்பு நிலைய பகுதியில் நேற்று இருவர் கைது செய்யப்பட்டனர். 


கைது செய்யப்பட்டவர்கள் முறையே 38 வயது 34 வயது உடைய மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள ஒருவரும் டிக்கோயா பகுதியைச் சேர்ந்த ஒருவரும் அடங்குவர்.


அவர்களிடம் இருந்து முறையே 3290 மில்லிகிரேம் ஜஸ் 360 மில்லிகிரேம் ஹேஸ் எனப் படும் போதைப் பொருள் மீட்டு உள்ளதாக மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.எஸ்.புஸ்ப்பகுமார தெரிவித்தார்.


அவர் மேலும் கூறுகையில் நெடுங்காலமாக சட்டவிரோதமாக முறையில் இப் பகுதியில் போதைப் பொருள் விற்பனை செய்து வருவதாக கிடைக்க பெற்ற இரகசிய தகவலை தொடர்ந்து மஸ்கெலியா பொலிஸ் நிலைய போதைப் பொருள் தடுப்பு பிரிவு பொலிஸார் இந்த சுற்றிவளைப்பை மேற் கொண்ட வேளையில் இந்த இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.


இவர்கள் இருவரையும் இன்று 15 ஆம் திகதி ஹட்டன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.


மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் போதைப்பொருளுடன் இருவர் கைது மஸ்கெலியா பொலிஸ் பிரிவில்  போதைப் பொருளுடன் இருவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.மஸ்கெலியா நல்லதண்ணி பிரதான சாலையில் புரவுன்லோ தோட்ட பால் சேகரிப்பு நிலைய பகுதியில் நேற்று இருவர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் முறையே 38 வயது 34 வயது உடைய மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள ஒருவரும் டிக்கோயா பகுதியைச் சேர்ந்த ஒருவரும் அடங்குவர்.அவர்களிடம் இருந்து முறையே 3290 மில்லிகிரேம் ஜஸ் 360 மில்லிகிரேம் ஹேஸ் எனப் படும் போதைப் பொருள் மீட்டு உள்ளதாக மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.எஸ்.புஸ்ப்பகுமார தெரிவித்தார்.அவர் மேலும் கூறுகையில் நெடுங்காலமாக சட்டவிரோதமாக முறையில் இப் பகுதியில் போதைப் பொருள் விற்பனை செய்து வருவதாக கிடைக்க பெற்ற இரகசிய தகவலை தொடர்ந்து மஸ்கெலியா பொலிஸ் நிலைய போதைப் பொருள் தடுப்பு பிரிவு பொலிஸார் இந்த சுற்றிவளைப்பை மேற் கொண்ட வேளையில் இந்த இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.இவர்கள் இருவரையும் இன்று 15 ஆம் திகதி ஹட்டன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement