• Apr 23 2026

கந்தளாயில் பொறிவைத்து மான்களை வேட்டையாடிய இருவர் கைது!

shanu / Jan 5th 2026, 10:20 am
image

கந்தளாய், சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குப்பைமேடு பகுதியில் சட்டவிரோதமாக பொறிவைத்து மான்களை வேட்டையாடிய இரு நபர்களை சூரியபுர பொலிசார் கைது செய்துள்ளனர்.


சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, சூரியபுர பொலிசாருக்கு கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது, வேட்டையாடப்பட்ட நிலையில் இருந்த இரண்டு மான்களுடன் சந்தேக நபர்கள் பிடிபட்டுள்ளனர்.


கைது செய்யும் போது, இரண்டு மான்களும் இறந்த நிலையில் இருந்ததுடன், அவற்றை எடுத்துச் செல்லத் தயாரான நிலையில் வைத்திருந்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.


மேலும், வேட்டையாடப்பட்ட இரண்டு மான்களும், வேட்டைக்கு பயன்படுத்தப்பட்ட பொறியும் பொலிசாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.


கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் கந்தளாய் சூரியபுர பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுவதுடன், அவர்கள் இன்றைய தினம் (05) திங்கட்கிழமை கந்தளாய் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.


இச்சம்பவம் தொடர்பாக சூரியபுர பொலிசார் மேலதிக விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

கந்தளாயில் பொறிவைத்து மான்களை வேட்டையாடிய இருவர் கைது கந்தளாய், சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குப்பைமேடு பகுதியில் சட்டவிரோதமாக பொறிவைத்து மான்களை வேட்டையாடிய இரு நபர்களை சூரியபுர பொலிசார் கைது செய்துள்ளனர்.சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, சூரியபுர பொலிசாருக்கு கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது, வேட்டையாடப்பட்ட நிலையில் இருந்த இரண்டு மான்களுடன் சந்தேக நபர்கள் பிடிபட்டுள்ளனர்.கைது செய்யும் போது, இரண்டு மான்களும் இறந்த நிலையில் இருந்ததுடன், அவற்றை எடுத்துச் செல்லத் தயாரான நிலையில் வைத்திருந்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.மேலும், வேட்டையாடப்பட்ட இரண்டு மான்களும், வேட்டைக்கு பயன்படுத்தப்பட்ட பொறியும் பொலிசாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் கந்தளாய் சூரியபுர பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுவதுடன், அவர்கள் இன்றைய தினம் (05) திங்கட்கிழமை கந்தளாய் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.இச்சம்பவம் தொடர்பாக சூரியபுர பொலிசார் மேலதிக விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement