• May 18 2026

திருகோணமலை விவசாயிகளுக்கு 1,001 மில்லியன் ரூபா நஷ்ட ஈடு வழங்கிவைப்பு!

shanu / Dec 25th 2025, 11:12 am
image

டித்வா சூறாவளி மற்றும் அதனால் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட திருகோணமலை மாவட்ட விவசாயிகளுக்கு நஷ்டஈடு வழங்கும் பணிகள் நேற்று (24) வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட விவசாய திணைக் காலம் தெரிவித்துள்ளது. 


அரசாங்கத்தின் இந்த துரித நடவடிக்கையின் மூலம் பல்லாயிரக்கணக்கான விவசாய குடும்பங்கள் நன்மையடைந்துள்ளன. திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த 7,515 விவசாயிகள் இந்தத் திட்டத்தின் கீழ் உள்வாங்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட ஒவ்வொரு விவசாயிக்கும் ஹெக்டேர் ஒன்றுக்கு150,000 ரூபா வீதம் வழங்கப்பட்டது. 


இதற்காக அரசாங்கம்1,001 ரூபாவை ஒதுக்கி, அதனை நேற்றைய தினத்திற்குள் வழங்கி முடித்துள்ளது.


​இந்த நிதி விநியோகம் குறித்து கருத்துத் தெரிவித்த அதிகாரிகள், இது வெறும் நஷ்டஈடு மாத்திரமல்ல எனத் தெரிவித்தனர். சூறாவளியினால் வாழ்வாதாரத்தை இழந்த விவசாயிகள், எவ்வித சுணக்கமுமின்றி மீண்டும் பயிற்சிகை நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கான ஒரு ஊட்டிப்பாகவும் இது வழங்கப்பட்டுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டனர்.


​திடீர் வெள்ளத்தினால் பெரும் நஷ்டத்தை எதிர்நோக்கியிருந்த நிலையில், அடுத்த சில நாட்களுக்குள்ளேயே அரசாங்கம் இந்த நிதியை நேரடியாக விவசாயிகளின் வங்கிச் கணக்குகளுக்கு வைப்புச் செய்தமை குறித்து மாவட்ட விவசாயிகள் தமது நன்றிகளைத் தெரிவித்துள்ளனர்.


இதன் மூலம் பெரும் கடன் சுமையிலிருந்து தப்பித்துள்ளதாகவும், உடனடியாக விதைப்பணிகளைத் தொடங்க முடியும் எனவும் அவர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.


திருகோணமலை விவசாயிகளுக்கு 1,001 மில்லியன் ரூபா நஷ்ட ஈடு வழங்கிவைப்பு டித்வா சூறாவளி மற்றும் அதனால் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட திருகோணமலை மாவட்ட விவசாயிகளுக்கு நஷ்டஈடு வழங்கும் பணிகள் நேற்று (24) வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட விவசாய திணைக் காலம் தெரிவித்துள்ளது. அரசாங்கத்தின் இந்த துரித நடவடிக்கையின் மூலம் பல்லாயிரக்கணக்கான விவசாய குடும்பங்கள் நன்மையடைந்துள்ளன. திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த 7,515 விவசாயிகள் இந்தத் திட்டத்தின் கீழ் உள்வாங்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட ஒவ்வொரு விவசாயிக்கும் ஹெக்டேர் ஒன்றுக்கு150,000 ரூபா வீதம் வழங்கப்பட்டது. இதற்காக அரசாங்கம்1,001 ரூபாவை ஒதுக்கி, அதனை நேற்றைய தினத்திற்குள் வழங்கி முடித்துள்ளது.​இந்த நிதி விநியோகம் குறித்து கருத்துத் தெரிவித்த அதிகாரிகள், இது வெறும் நஷ்டஈடு மாத்திரமல்ல எனத் தெரிவித்தனர். சூறாவளியினால் வாழ்வாதாரத்தை இழந்த விவசாயிகள், எவ்வித சுணக்கமுமின்றி மீண்டும் பயிற்சிகை நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கான ஒரு ஊட்டிப்பாகவும் இது வழங்கப்பட்டுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டனர்.​திடீர் வெள்ளத்தினால் பெரும் நஷ்டத்தை எதிர்நோக்கியிருந்த நிலையில், அடுத்த சில நாட்களுக்குள்ளேயே அரசாங்கம் இந்த நிதியை நேரடியாக விவசாயிகளின் வங்கிச் கணக்குகளுக்கு வைப்புச் செய்தமை குறித்து மாவட்ட விவசாயிகள் தமது நன்றிகளைத் தெரிவித்துள்ளனர்.இதன் மூலம் பெரும் கடன் சுமையிலிருந்து தப்பித்துள்ளதாகவும், உடனடியாக விதைப்பணிகளைத் தொடங்க முடியும் எனவும் அவர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement