• Sep 10 2026

கும்பாபிஷேகத்தில் பங்கேற்கச் சென்ற இளைஞருக்கு நேர்ந்த சோகம்; மட்டக்களப்பில் விபரீதம்

Chithra / Sep 9th 2026, 12:04 pm
image


மட்டக்களப்பு – சந்திவெளி பகுதியில் இன்று (09) அதிகாலை இடம்பெற்ற கோர விபத்தில் 22 வயதான இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.


கிரான்குளம் பகுதியைச் சேர்ந்த குறித்த இளைஞர், பாசிக்குடாவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார்.


இந்நிலையில், இரவுப் பணியை முடித்துவிட்டு தனது கிராமத்தில் உள்ள ஆலயத்தில் நடைபெறவிருந்த கும்பாபிஷேக நிகழ்வில் கலந்துகொள்வதற்காக இன்று அதிகாலை மோட்டார் சைக்கிளில் கிரான்குளம் நோக்கி பயணித்துள்ளார்.


சந்திவெளி பகுதியில் பயணித்துக்கொண்டிருந்தபோது, எதிரே வந்த பேருந்துடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியதில் இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.


விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை சந்திவெளி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


இந்தச் சம்பவம் கிரான்குளம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


கும்பாபிஷேகத்தில் பங்கேற்கச் சென்ற இளைஞருக்கு நேர்ந்த சோகம்; மட்டக்களப்பில் விபரீதம் மட்டக்களப்பு – சந்திவெளி பகுதியில் இன்று (09) அதிகாலை இடம்பெற்ற கோர விபத்தில் 22 வயதான இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.கிரான்குளம் பகுதியைச் சேர்ந்த குறித்த இளைஞர், பாசிக்குடாவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார்.இந்நிலையில், இரவுப் பணியை முடித்துவிட்டு தனது கிராமத்தில் உள்ள ஆலயத்தில் நடைபெறவிருந்த கும்பாபிஷேக நிகழ்வில் கலந்துகொள்வதற்காக இன்று அதிகாலை மோட்டார் சைக்கிளில் கிரான்குளம் நோக்கி பயணித்துள்ளார்.சந்திவெளி பகுதியில் பயணித்துக்கொண்டிருந்தபோது, எதிரே வந்த பேருந்துடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியதில் இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை சந்திவெளி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.இந்தச் சம்பவம் கிரான்குளம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement