• Sep 17 2026

திருகோணமலையில் பரிதாபம்; தேங்காய் குவியலில் மறைந்திருந்த பாம்பு தீண்டி பெண் பலி

Chithra / Sep 16th 2026, 11:27 am
image


திருகோணமலை – சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிறிதுவ கிராமத்தில் பாம்பு தீண்டியதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.


இந்தச் சம்பவம் நேற்று (15) செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.


சிறிதுவ கிராமத்தைச் சேர்ந்த மொலக்கொட கெதர சாந்தினி பிரேமலதா என்ற  49 வயதுடைய குடும்பப் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.


அவர் தேங்காய் உரித்துக் கொண்டிருந்தபோது, தேங்காய் குவியலுக்குள் மறைந்திருந்த பாம்பு அவரை தீண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


இதனையடுத்து, அவர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.


உயிரிழந்த பெண்ணின் சடலம் கந்தளாய் தள வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.


சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சேருநுவர பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

திருகோணமலையில் பரிதாபம்; தேங்காய் குவியலில் மறைந்திருந்த பாம்பு தீண்டி பெண் பலி திருகோணமலை – சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிறிதுவ கிராமத்தில் பாம்பு தீண்டியதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இந்தச் சம்பவம் நேற்று (15) செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.சிறிதுவ கிராமத்தைச் சேர்ந்த மொலக்கொட கெதர சாந்தினி பிரேமலதா என்ற  49 வயதுடைய குடும்பப் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.அவர் தேங்காய் உரித்துக் கொண்டிருந்தபோது, தேங்காய் குவியலுக்குள் மறைந்திருந்த பாம்பு அவரை தீண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இதனையடுத்து, அவர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.உயிரிழந்த பெண்ணின் சடலம் கந்தளாய் தள வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சேருநுவர பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement