• Aug 24 2026

வீட்டின் அருகே விளையாடிய 2 வயது குழந்தைக்கு நேர்ந்த விபரீதம்

Aathira / Aug 24th 2026, 7:17 pm
image

அநுராதபுரம், கல்னேவ – கலேவெவ வீதிப் பகுதியில் உள்ள கால்வாயில் விழுந்து இரண்டு வயது குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

குழந்தையைக் காணவில்லை என அதன் தந்தை நேற்று (23) கல்னேவ பொலிஸில் முறைப்பாடு செய்ததைத் தொடர்ந்து, பொலிஸாரும் பிரதேச மக்களும் இணைந்து தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.

இதன்போது, வீட்டிற்கு அருகிலுள்ள கால்வாயின் பாலத்தின் கீழ் குழந்தை சிக்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

உடனடியாக குழந்தை கல்னேவ வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கல்னேவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

வீட்டின் அருகே விளையாடிய 2 வயது குழந்தைக்கு நேர்ந்த விபரீதம் அநுராதபுரம், கல்னேவ – கலேவெவ வீதிப் பகுதியில் உள்ள கால்வாயில் விழுந்து இரண்டு வயது குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது.குழந்தையைக் காணவில்லை என அதன் தந்தை நேற்று (23) கல்னேவ பொலிஸில் முறைப்பாடு செய்ததைத் தொடர்ந்து, பொலிஸாரும் பிரதேச மக்களும் இணைந்து தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.இதன்போது, வீட்டிற்கு அருகிலுள்ள கால்வாயின் பாலத்தின் கீழ் குழந்தை சிக்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது.உடனடியாக குழந்தை கல்னேவ வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.சம்பவம் தொடர்பில் கல்னேவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement