• Sep 26 2026

தலைமன்னாரிலிருந்து ராமர் பாலத்தின் 8 மணல் திட்டுகளுக்கு சுற்றுலா வாய்ப்பு

dorin / Sep 26th 2026, 2:35 pm
image

தலைமன்னாரிலிருந்து ராமர் பாலத்துடன் தொடர்புடைய எட்டு மணல் திட்டுகளை சுற்றுலாவிகள் பார்வையிடுவதற்கான வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளமை, வடக்கு மாகாணத்தின் சுற்றுலாத்துறை வளர்ச்சியில் புதிய அத்தியாயமாக அமையும். இதன் ஊடாக மன்னார் மாவட்டத்துக்கு உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாவிகளின் வருகை கணிசமாக அதிகரிக்கும் என நம்புகின்றேன் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார்.

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு, வடக்கு மாகாண சுற்றுலாப் பணியகம், மன்னார் மாவட்டச் செயலகம் மற்றும் வடக்கு மாகாண தொழிற்துறை மன்றம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த உலக சுற்றுலா தினம் – 2026 இன் முதலாம் நாள் நிகழ்வு நேற்று (25.09.2026) வெள்ளிக்கிழமை மன்னார் அல்பத்தா மைதானத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட ஆளுநர், உள்ளூர் உணவு உற்பத்திகள் மற்றும் கைவினைப் பொருட்களின் கண்காட்சியைப் பார்வையிட்ட பின்னர் இடம்பெற்ற மேடை நிகழ்வில் உரையாற்றிய போதே இவ்வாறு தெரிவித்தார்.

வடக்கு மாகாணத்தின் சுற்றுலாத்துறை படிப்படியாக வளர்ச்சியடைந்து வருவதாகத் தெரிவித்த ஆளுநர், எமது மாகாணத்தை நோக்கி சுற்றுலாவிகள் வருகை தருவதற்கான சாதகமான சூழல் தற்போது உருவாகியுள்ளதாகக் குறிப்பிட்டார். தற்போதைய அரசாங்கமும் சுற்றுலாத்துறையின் அபிவிருத்திக்காக குறிப்பிடத்தக்க நிதியை ஒதுக்கி வருவதாகத் தெரிவித்த அவர், இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி வடக்கு மாகாணத்தின் சுற்றுலாத்துறையை மேலும் வளர்ச்சியடையச் செய்ய வேண்டும் எனக் கூறினார்.

வெளிநாடுகளிலிருந்து வருகை தரும் சுற்றுலாவிகள் எமது பாரம்பரிய உணவு வகைகளை விரும்பித் தேடி உண்பதாகக் குறிப்பிட்ட ஆளுநர், அவர்களை ஈர்க்கும் வகையில் பாரம்பரிய உணவு வகைகளை காட்சிப்படுத்துவதற்கும் விற்பனை செய்வதற்கும் ஊக்குவிப்பது சிறந்த நடவடிக்கையாக அமையும் எனத் தெரிவித்தார்.

வடக்கு மாகாண சுற்றுலாப் பணியகம் ஏற்கனவே மாவட்டம்தோறும் இவ்வாறான உணவுத் திருவிழாக்களை முன்னெடுத்து வருவது பாராட்டத்தக்கது எனவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், தலைமன்னாரிலிருந்து ராமர் பாலத்துடன் தொடர்புடைய எட்டு மணல் திட்டுகளை சுற்றுலாவிகள் பார்வையிடுவதற்கான வாய்ப்பு தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்த ஆளுநர், இது வடக்கு மாகாணத்தின் சுற்றுலாத்துறை வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை ஏற்படுத்தும் என நம்பிக்கை தெரிவித்தார்.

இவ்வாறான புதிய சுற்றுலா வாய்ப்புகள் உருவாக்கப்படுவதன் மூலம் மன்னார் மாவட்டத்தின் இயற்கை மற்றும் சுற்றுலா வளங்கள் மேலும் அறிமுகப்படுத்தப்படுவதுடன், மாவட்டத்தை நோக்கிய உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாவிகளின் வருகையையும் அதிகரிக்கக்கூடிய வாய்ப்பு உருவாகும் என அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் மன்னார் மாவட்டச் செயலர், வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர், மன்னார் நகர சபையின் கௌரவ தவிசாளர், வடக்கு மாகாண சுற்றுலாப் பணியகத்தின் தலைவர், பணிப்பாளர் மற்றும் உறுப்பினர்கள், உள்ளூராட்சி அமைச்சின் திட்டமிடல் பணிப்பாளர் மற்றும் கணக்காளர், மன்னார் மாவட்டச் செயலக அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தலைமன்னாரிலிருந்து ராமர் பாலத்தின் 8 மணல் திட்டுகளுக்கு சுற்றுலா வாய்ப்பு தலைமன்னாரிலிருந்து ராமர் பாலத்துடன் தொடர்புடைய எட்டு மணல் திட்டுகளை சுற்றுலாவிகள் பார்வையிடுவதற்கான வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளமை, வடக்கு மாகாணத்தின் சுற்றுலாத்துறை வளர்ச்சியில் புதிய அத்தியாயமாக அமையும். இதன் ஊடாக மன்னார் மாவட்டத்துக்கு உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாவிகளின் வருகை கணிசமாக அதிகரிக்கும் என நம்புகின்றேன் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார்.உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு, வடக்கு மாகாண சுற்றுலாப் பணியகம், மன்னார் மாவட்டச் செயலகம் மற்றும் வடக்கு மாகாண தொழிற்துறை மன்றம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த உலக சுற்றுலா தினம் – 2026 இன் முதலாம் நாள் நிகழ்வு நேற்று (25.09.2026) வெள்ளிக்கிழமை மன்னார் அல்பத்தா மைதானத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட ஆளுநர், உள்ளூர் உணவு உற்பத்திகள் மற்றும் கைவினைப் பொருட்களின் கண்காட்சியைப் பார்வையிட்ட பின்னர் இடம்பெற்ற மேடை நிகழ்வில் உரையாற்றிய போதே இவ்வாறு தெரிவித்தார்.வடக்கு மாகாணத்தின் சுற்றுலாத்துறை படிப்படியாக வளர்ச்சியடைந்து வருவதாகத் தெரிவித்த ஆளுநர், எமது மாகாணத்தை நோக்கி சுற்றுலாவிகள் வருகை தருவதற்கான சாதகமான சூழல் தற்போது உருவாகியுள்ளதாகக் குறிப்பிட்டார். தற்போதைய அரசாங்கமும் சுற்றுலாத்துறையின் அபிவிருத்திக்காக குறிப்பிடத்தக்க நிதியை ஒதுக்கி வருவதாகத் தெரிவித்த அவர், இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி வடக்கு மாகாணத்தின் சுற்றுலாத்துறையை மேலும் வளர்ச்சியடையச் செய்ய வேண்டும் எனக் கூறினார்.வெளிநாடுகளிலிருந்து வருகை தரும் சுற்றுலாவிகள் எமது பாரம்பரிய உணவு வகைகளை விரும்பித் தேடி உண்பதாகக் குறிப்பிட்ட ஆளுநர், அவர்களை ஈர்க்கும் வகையில் பாரம்பரிய உணவு வகைகளை காட்சிப்படுத்துவதற்கும் விற்பனை செய்வதற்கும் ஊக்குவிப்பது சிறந்த நடவடிக்கையாக அமையும் எனத் தெரிவித்தார்.வடக்கு மாகாண சுற்றுலாப் பணியகம் ஏற்கனவே மாவட்டம்தோறும் இவ்வாறான உணவுத் திருவிழாக்களை முன்னெடுத்து வருவது பாராட்டத்தக்கது எனவும் அவர் குறிப்பிட்டார்.மேலும், தலைமன்னாரிலிருந்து ராமர் பாலத்துடன் தொடர்புடைய எட்டு மணல் திட்டுகளை சுற்றுலாவிகள் பார்வையிடுவதற்கான வாய்ப்பு தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்த ஆளுநர், இது வடக்கு மாகாணத்தின் சுற்றுலாத்துறை வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை ஏற்படுத்தும் என நம்பிக்கை தெரிவித்தார்.இவ்வாறான புதிய சுற்றுலா வாய்ப்புகள் உருவாக்கப்படுவதன் மூலம் மன்னார் மாவட்டத்தின் இயற்கை மற்றும் சுற்றுலா வளங்கள் மேலும் அறிமுகப்படுத்தப்படுவதுடன், மாவட்டத்தை நோக்கிய உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாவிகளின் வருகையையும் அதிகரிக்கக்கூடிய வாய்ப்பு உருவாகும் என அவர் தெரிவித்தார்.இந்நிகழ்வில் மன்னார் மாவட்டச் செயலர், வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர், மன்னார் நகர சபையின் கௌரவ தவிசாளர், வடக்கு மாகாண சுற்றுலாப் பணியகத்தின் தலைவர், பணிப்பாளர் மற்றும் உறுப்பினர்கள், உள்ளூராட்சி அமைச்சின் திட்டமிடல் பணிப்பாளர் மற்றும் கணக்காளர், மன்னார் மாவட்டச் செயலக அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement