எதிர்வரும் நாட்களில் வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மாலை நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேற்கு மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், முல்லைத்தீவு மாவட்டத்திலும் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
இதனிடையே, மத்திய மலைநாட்டின் மேற்குச் சரிவுகள், வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்கள், ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களில் அவ்வப்போது மணிக்கு 30 முதல் 40 கிலோமீற்றர் வேகத்தில் மிதமான பலத்த காற்று வீசக்கூடும் எனவும் திணைக்களம் அறிவித்துள்ளது.
இடியுடன் கூடிய மழையின்போது தற்காலிகமாக பலத்த காற்று வீசுவதுடன், மின்னல் தாக்கம் ஏற்படக்கூடிய அபாயம் உள்ளதால், பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், சூரியன் தெற்கு நோக்கி நகர்வதன் காரணமாக, ஆகஸ்ட் 28 முதல் செப்டெம்பர் 7ஆம் திகதி வரை இலங்கைக்கு அண்மையான அட்சரேகைப் பகுதிகளில் சூரியன் நேரடியாக உச்சியில் காணப்படும்.
அதன்படி, இன்று (02) நண்பகல் 12.10 மணியளவில் அனமடுவ, மொரகொல்லகம, தம்புள்ள, மணம்பிட்டிய மற்றும் வாளைச்சேனை ஆகிய பகுதிகளில் சூரியன் நேரடியாக உச்சியில் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சிலாபம் முதல் கொழும்பு, காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடல் பிராந்தியங்களில் பல இடங்களில் மழை பெய்யக்கூடும்.
கடல் பிராந்தியங்களில் தென்மேற்குத் திசையிலிருந்து மணிக்கு 30 முதல் 40 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும்.
ஹம்பாந்தோட்டை முதல் பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் மணிக்கு 50 முதல் 60 கிலோமீற்றர் அல்லது அதற்கு அதிகமான வேகத்தில் அவ்வப்போது காற்று அதிகரித்து வீசக்கூடும். இதனால் குறித்த கடல் பிராந்தியங்கள் கொந்தளிப்பான நிலையில் காணப்படலாம்.
காங்கேசன்துறை முதல் மன்னார் ஊடாக புத்தளம் வரையான கடல் பிராந்தியங்களிலும் மணிக்கு 50 கிலோமீற்றருக்கும் அதிகமான வேகத்தில் இடைக்கிடையே காற்று அதிகரித்து வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், புத்தளம் முதல் கொழும்பு, காலி, மாத்தறை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் கடல் அலைகள் சுமார் 2.0 முதல் 2.5 மீற்றர் உயரம் வரை மேலெழக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்று நண்பகல் உச்சம் கொடுக்கும் சூரியன் - மாலை நேரங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு எதிர்வரும் நாட்களில் வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மாலை நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.மேற்கு மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், முல்லைத்தீவு மாவட்டத்திலும் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.இதனிடையே, மத்திய மலைநாட்டின் மேற்குச் சரிவுகள், வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்கள், ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களில் அவ்வப்போது மணிக்கு 30 முதல் 40 கிலோமீற்றர் வேகத்தில் மிதமான பலத்த காற்று வீசக்கூடும் எனவும் திணைக்களம் அறிவித்துள்ளது.இடியுடன் கூடிய மழையின்போது தற்காலிகமாக பலத்த காற்று வீசுவதுடன், மின்னல் தாக்கம் ஏற்படக்கூடிய அபாயம் உள்ளதால், பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.மேலும், சூரியன் தெற்கு நோக்கி நகர்வதன் காரணமாக, ஆகஸ்ட் 28 முதல் செப்டெம்பர் 7ஆம் திகதி வரை இலங்கைக்கு அண்மையான அட்சரேகைப் பகுதிகளில் சூரியன் நேரடியாக உச்சியில் காணப்படும்.அதன்படி, இன்று (02) நண்பகல் 12.10 மணியளவில் அனமடுவ, மொரகொல்லகம, தம்புள்ள, மணம்பிட்டிய மற்றும் வாளைச்சேனை ஆகிய பகுதிகளில் சூரியன் நேரடியாக உச்சியில் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.சிலாபம் முதல் கொழும்பு, காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடல் பிராந்தியங்களில் பல இடங்களில் மழை பெய்யக்கூடும்.கடல் பிராந்தியங்களில் தென்மேற்குத் திசையிலிருந்து மணிக்கு 30 முதல் 40 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும்.ஹம்பாந்தோட்டை முதல் பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் மணிக்கு 50 முதல் 60 கிலோமீற்றர் அல்லது அதற்கு அதிகமான வேகத்தில் அவ்வப்போது காற்று அதிகரித்து வீசக்கூடும். இதனால் குறித்த கடல் பிராந்தியங்கள் கொந்தளிப்பான நிலையில் காணப்படலாம்.காங்கேசன்துறை முதல் மன்னார் ஊடாக புத்தளம் வரையான கடல் பிராந்தியங்களிலும் மணிக்கு 50 கிலோமீற்றருக்கும் அதிகமான வேகத்தில் இடைக்கிடையே காற்று அதிகரித்து வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன், புத்தளம் முதல் கொழும்பு, காலி, மாத்தறை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் கடல் அலைகள் சுமார் 2.0 முதல் 2.5 மீற்றர் உயரம் வரை மேலெழக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.