• Apr 26 2026

சர்வதேச சமாதான நடைபயணத்தின் 5ஆம் நாள் இன்று - மக்களிடம் பொலிஸார் விடுத்த அவசர வேண்டுகோள்!

Chithra / Apr 26th 2026, 11:03 am
image

'ஏஹிபஸ்ஸிகோ' சமாதான நடைபயணத்தின் ஐந்தாவது நாள் இன்று (26) தோலங்கமுவ தேசிய பாடசாலைக்கு அருகாமையிலிருந்து ஆரம்பமானது. 


இன்றைய தினம் இந்த நடைபயணம் யக்கல அபேசேகரராமய வரை சென்றடையவுள்ளது.


நாளை (27) யக்கல அபேசேகரராமயவிலிருந்து களனி ரஜமஹா விகாரை வரை நடைபயணம் தொடரவுள்ளதுடன், ஏப்ரல் 28ஆம் திகதி களனி ரஜமஹா விகாரையில் பாடசாலை மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுடன் விசேட கலந்துரையாடல் ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


அதனைத் தொடர்ந்து நடைபயணம் களனி விகாரையிலிருந்து கொழும்பு சுதந்திர சதுக்கத்தை நோக்கி நகரவுள்ளது.


அன்றைய தினம் சுதந்திர சதுக்கத்தில் நடைபெறவுள்ள 'ஏஹிபஸ்ஸிகோ' சமாதான நடைபயணத்தின் அரச விழாவில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பிரதம அதிதியாகக் கலந்துகொள்ளவுள்ளார்.


இலங்கைக்கு வருகை தந்துள்ள வியட்நாம் நாட்டைச் சேர்ந்த வணக்கத்திற்குரிய பன்னாகர தேரர் தலைமையிலான தேரர்களின் பங்கேற்புடன், கடந்த 21ஆம் திகதி தம்புள்ளை ரஜமஹா விகாரையிலிருந்து இந்த நடைபயணம் ஆரம்பிக்கப்பட்டது.


இந்நிலையில் இந்த சர்வதேச 'சமாதான நடைபயணத்தை' எவ்வித இடையூறுகளுமின்றி வெற்றிகரமாக நிறைவு செய்வதற்கு பொதுமக்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என பொலிஸ் தலைமையகம் கோரிக்கை விடுத்துள்ளது.


இந்த நடைபயணத்தில் உலகப் புகழ்பெற்ற "ஆலோகா" (Aloka) எனும் நாயும் இணைந்துள்ளது. இதனைப் பார்ப்பதற்கும், நடைபயணக் குழுவினருக்குக் கௌரவம் அளிப்பதற்கும் வீதிகளின் இருமருங்கிலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு வருகின்றனர்.


நடைபயணத்தின்போது சில இடங்களில் பொதுமக்கள் நடந்து கொள்ளும் விதம் குறித்து பொலிஸார் கவலை வெளியிட்டுள்ளனர். 


குறிப்பாக மக்கள் ஒருவரை ஒருவர் தள்ளுவது மற்றும் முண்டியடிப்பது.

தேவையற்ற முறையில் மிக நெருக்கமாகச் சென்று புகைப்படம் மற்றும் வீடியோ எடுப்பது.

நடைபயணத்தில் வரும் "ஆலோகா" நாயைத் தொட முயற்சிப்பது.


இவ்வாறான செயல்கள் தூதுக்குழுவினரின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமைவதுடன், 

நடைபயணத்தின் நோக்கத்திற்கும் இடையூறாக அமைவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


"சர்வதேச ரீதியில் நாட்டின் நற்பெயரை உறுதிப்படுத்தும் இந்த நிகழ்வை, மிகுந்த நிதானத்துடனும் ஒழுக்கத்துடனும் அணுக வேண்டும்" என பொலிஸார் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.


சர்வதேச சமாதான நடைபயணத்தின் 5ஆம் நாள் இன்று - மக்களிடம் பொலிஸார் விடுத்த அவசர வேண்டுகோள் 'ஏஹிபஸ்ஸிகோ' சமாதான நடைபயணத்தின் ஐந்தாவது நாள் இன்று (26) தோலங்கமுவ தேசிய பாடசாலைக்கு அருகாமையிலிருந்து ஆரம்பமானது. இன்றைய தினம் இந்த நடைபயணம் யக்கல அபேசேகரராமய வரை சென்றடையவுள்ளது.நாளை (27) யக்கல அபேசேகரராமயவிலிருந்து களனி ரஜமஹா விகாரை வரை நடைபயணம் தொடரவுள்ளதுடன், ஏப்ரல் 28ஆம் திகதி களனி ரஜமஹா விகாரையில் பாடசாலை மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுடன் விசேட கலந்துரையாடல் ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.அதனைத் தொடர்ந்து நடைபயணம் களனி விகாரையிலிருந்து கொழும்பு சுதந்திர சதுக்கத்தை நோக்கி நகரவுள்ளது.அன்றைய தினம் சுதந்திர சதுக்கத்தில் நடைபெறவுள்ள 'ஏஹிபஸ்ஸிகோ' சமாதான நடைபயணத்தின் அரச விழாவில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பிரதம அதிதியாகக் கலந்துகொள்ளவுள்ளார்.இலங்கைக்கு வருகை தந்துள்ள வியட்நாம் நாட்டைச் சேர்ந்த வணக்கத்திற்குரிய பன்னாகர தேரர் தலைமையிலான தேரர்களின் பங்கேற்புடன், கடந்த 21ஆம் திகதி தம்புள்ளை ரஜமஹா விகாரையிலிருந்து இந்த நடைபயணம் ஆரம்பிக்கப்பட்டது.இந்நிலையில் இந்த சர்வதேச 'சமாதான நடைபயணத்தை' எவ்வித இடையூறுகளுமின்றி வெற்றிகரமாக நிறைவு செய்வதற்கு பொதுமக்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என பொலிஸ் தலைமையகம் கோரிக்கை விடுத்துள்ளது.இந்த நடைபயணத்தில் உலகப் புகழ்பெற்ற "ஆலோகா" (Aloka) எனும் நாயும் இணைந்துள்ளது. இதனைப் பார்ப்பதற்கும், நடைபயணக் குழுவினருக்குக் கௌரவம் அளிப்பதற்கும் வீதிகளின் இருமருங்கிலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு வருகின்றனர்.நடைபயணத்தின்போது சில இடங்களில் பொதுமக்கள் நடந்து கொள்ளும் விதம் குறித்து பொலிஸார் கவலை வெளியிட்டுள்ளனர். குறிப்பாக மக்கள் ஒருவரை ஒருவர் தள்ளுவது மற்றும் முண்டியடிப்பது.தேவையற்ற முறையில் மிக நெருக்கமாகச் சென்று புகைப்படம் மற்றும் வீடியோ எடுப்பது.நடைபயணத்தில் வரும் "ஆலோகா" நாயைத் தொட முயற்சிப்பது.இவ்வாறான செயல்கள் தூதுக்குழுவினரின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமைவதுடன், நடைபயணத்தின் நோக்கத்திற்கும் இடையூறாக அமைவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது."சர்வதேச ரீதியில் நாட்டின் நற்பெயரை உறுதிப்படுத்தும் இந்த நிகழ்வை, மிகுந்த நிதானத்துடனும் ஒழுக்கத்துடனும் அணுக வேண்டும்" என பொலிஸார் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement