முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரத்தின் 5ஆம் நாளான இன்று யாழ்.தென்மராட்சி வரணிப்பிரதேசத்தில் நினைவு நாள் அனுஷ்டிக்கப்பட்டதுடன் முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சியும் காய்ச்சி வழங்கப்பட்டது.
வலி சுமந்த நினைவு நாளில் சட்டத்தரணி கேசவன் சயந்தன் மற்றும் சாவகச்சேரி பிரதேச சபை தவிசாளர் பொன்னையா குகதாசன் மற்றும் உறுப்பினர்களான சிதம்பரப்பிள்ளை பிரபாகரன் குஞ்சுத்தம்பி தினேஸ் உள்ளிட்டோரும் இறுதி யுத்தத்தில் உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
யாழ்.தென்மராட்சி வரணிப்பிரதேசத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு நாள் அனுஷ்டிப்பு முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரத்தின் 5ஆம் நாளான இன்று யாழ்.தென்மராட்சி வரணிப்பிரதேசத்தில் நினைவு நாள் அனுஷ்டிக்கப்பட்டதுடன் முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சியும் காய்ச்சி வழங்கப்பட்டது.அந்தவகையில் வரணி மக்களால் ஏற்பாட்டில் வரணி மத்தியகல்லூரி முன்றலில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டு நினைவுக்கஞ்சியும் பரிமாறப்பட்டது.வலி சுமந்த நினைவு நாளில் சட்டத்தரணி கேசவன் சயந்தன் மற்றும் சாவகச்சேரி பிரதேச சபை தவிசாளர் பொன்னையா குகதாசன் மற்றும் உறுப்பினர்களான சிதம்பரப்பிள்ளை பிரபாகரன் குஞ்சுத்தம்பி தினேஸ் உள்ளிட்டோரும் இறுதி யுத்தத்தில் உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.