• Apr 19 2026

வவுனியாவில் ஆறுமுகநாவலரின் 146வது குருபூஜை தினம் இன்று!

Ziya / Dec 5th 2025, 1:00 pm
image

ஆறுமுகநாவலரின் 146 வது குருபூஜை  இன்றைய தினம் வவுனியாவில் இடம்பெற்றுள்ளது.   

குறித்த நிகழ்வு வவுனியா இலுப்பையடி பகுதியில் அமைந்துள்ள அவரது நினைவுச் சிலையடியில்  இடம்பெற்றது.  

இதன்போது அண்மையில் இடம்பெற்றிருந்த வெள்ள பேரிடரிலே பலியாகியவர்களிற்காக ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

குறித்த அஞ்சலியினை தொடர்ந்து, ஆறுமுகநாவலரின் சிலைக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டதுடன், மலர்தூவி  மரியாதை செலுத்தப்பட்டு, அவர் தொடர்பான நினைவுரைகளும் இடம்பெற்றது.

வவுனியா முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கம் மற்றும் வவுனியா மாநகரசபையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில், வர்த்தகர்கள், சமூக சேவையாளர்கள், பொதுமக்கள், நகரசபை ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.



வவுனியாவில் ஆறுமுகநாவலரின் 146வது குருபூஜை தினம் இன்று ஆறுமுகநாவலரின் 146 வது குருபூஜை  இன்றைய தினம் வவுனியாவில் இடம்பெற்றுள்ளது.   குறித்த நிகழ்வு வவுனியா இலுப்பையடி பகுதியில் அமைந்துள்ள அவரது நினைவுச் சிலையடியில்  இடம்பெற்றது.  இதன்போது அண்மையில் இடம்பெற்றிருந்த வெள்ள பேரிடரிலே பலியாகியவர்களிற்காக ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.குறித்த அஞ்சலியினை தொடர்ந்து, ஆறுமுகநாவலரின் சிலைக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டதுடன், மலர்தூவி  மரியாதை செலுத்தப்பட்டு, அவர் தொடர்பான நினைவுரைகளும் இடம்பெற்றது.வவுனியா முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கம் மற்றும் வவுனியா மாநகரசபையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில், வர்த்தகர்கள், சமூக சேவையாளர்கள், பொதுமக்கள், நகரசபை ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement