யாழ்ப்பாணம், திஸ்ஸ விகாரை அமைப்பதற்காக ஆக்கிரமிக்கப்பட்ட பவானி வீதியை மீள விடுவிப்பது தொடர்பாக நீதிமன்றம் அண்மையில் முக்கிய உத்தரவை பிறப்பித்திருந்தது. இவ்வீதியை விடுவிப்பதற்கு எவ்வித தடையும் விதிக்க முடியாது என நீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ள நிலையில், இத்தீர்ப்பைத் திரித்து தென்பகுதியில் வீண் குழப்பங்களை உருவாக்கச் சதி இடம்பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நீதிமன்றத் தீர்ப்பை அடிப்படையாக வைத்து வட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளக் குழுக்கள் ஊடாக போலியான மற்றும் இனவாதத்தைத் தூண்டும் கருத்துக்கள் மிக வேகமாகப் பரப்பப்பட்டு வருகின்றன. இவ்வாறு திட்டமிட்டுப் பரப்பப்படும் வதந்திகள் மூலம் மக்களைத் திரட்டி, யாழ்ப்பாணத்தில் போராட்டம் நடத்துவதற்காக தென்னிலங்கையிலிருந்து குழுவொன்று தற்போது யாழ்ப்பாணம் நோக்கி அழைத்து வரப்படுவதாகச் சுட்டிக்காட்டப்படுகின்றது.
அதேவேளை, ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளையும் வீதியையும் விடுவித்தால் அப்பகுதியில் இனக் கலவரங்களும் சட்டம்-ஒழுங்குப் பிரச்சினைகளும் ஏற்படும் எனக் கூறி நீதிமன்றத்தை நாடும் பொலிஸார், தெற்கிலிருந்து குழுக்களைத் திரட்டி வரப்படும் இத்தகைய பகிரங்கமான குழப்பச் செயல்கள் குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் மௌனம் காப்பது தொடர்பில் சமூக ஆர்வலர்கள் மற்றும் மக்கள் மத்தியில் கடும் விசனமும் அதிர்ச்சியும் ஏற்பட்டுள்ளது.
திஸ்ஸ விகாரை வீதி விவகாரம்: யாழில் குழப்பம் விளைவிக்க தெற்கிலிருந்து குழுவொன்று வருகை யாழ்ப்பாணம், திஸ்ஸ விகாரை அமைப்பதற்காக ஆக்கிரமிக்கப்பட்ட பவானி வீதியை மீள விடுவிப்பது தொடர்பாக நீதிமன்றம் அண்மையில் முக்கிய உத்தரவை பிறப்பித்திருந்தது. இவ்வீதியை விடுவிப்பதற்கு எவ்வித தடையும் விதிக்க முடியாது என நீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ள நிலையில், இத்தீர்ப்பைத் திரித்து தென்பகுதியில் வீண் குழப்பங்களை உருவாக்கச் சதி இடம்பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.நீதிமன்றத் தீர்ப்பை அடிப்படையாக வைத்து வட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளக் குழுக்கள் ஊடாக போலியான மற்றும் இனவாதத்தைத் தூண்டும் கருத்துக்கள் மிக வேகமாகப் பரப்பப்பட்டு வருகின்றன. இவ்வாறு திட்டமிட்டுப் பரப்பப்படும் வதந்திகள் மூலம் மக்களைத் திரட்டி, யாழ்ப்பாணத்தில் போராட்டம் நடத்துவதற்காக தென்னிலங்கையிலிருந்து குழுவொன்று தற்போது யாழ்ப்பாணம் நோக்கி அழைத்து வரப்படுவதாகச் சுட்டிக்காட்டப்படுகின்றது.அதேவேளை, ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளையும் வீதியையும் விடுவித்தால் அப்பகுதியில் இனக் கலவரங்களும் சட்டம்-ஒழுங்குப் பிரச்சினைகளும் ஏற்படும் எனக் கூறி நீதிமன்றத்தை நாடும் பொலிஸார், தெற்கிலிருந்து குழுக்களைத் திரட்டி வரப்படும் இத்தகைய பகிரங்கமான குழப்பச் செயல்கள் குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் மௌனம் காப்பது தொடர்பில் சமூக ஆர்வலர்கள் மற்றும் மக்கள் மத்தியில் கடும் விசனமும் அதிர்ச்சியும் ஏற்பட்டுள்ளது.