• Oct 20 2026

மூன்று மணிநேர விசாரணை! ஜி.எல். பீரிஸிடம் கேட்கப்பட்டதென்ன?

Chithra / Oct 20th 2026, 12:55 pm
image


முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் இன்று இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்ட சம்பவம் கவனத்தை ஈர்த்துள்ளது.


இன்று (20) காலை ஆணைக்குழுவில் முன்னிலையான அவரிடம், ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணையொன்று தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.


ஆனால், அவர் எதற்காக அழைக்கப்பட்டார் என்பதுதான் இங்கு முக்கியமான விடயம்.


அவர் வெளிவிவகார அமைச்சராகப் பதவி வகித்த காலப்பகுதியில் நடைபெற்ற கூட்டமொன்று தொடர்பாகவே இந்த விசாரணை முன்னெடுக்கப்படுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.


குறிப்பாக, 2009ஆம் ஆண்டு வெளிவிவகார அமைச்சுடன் தொடர்புடைய கலந்துரையாடல் ஒன்று குறித்த தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்காகவே அவர் அழைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.


இதன்போது சுமார் மூன்று மணிநேரம் அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.


அதனைத் தொடர்ந்து, ஜி.எல். பீரிஸ் இன்று ஆணைக்குழுவிலிருந்து வெளியேறியுள்ளார்.

மூன்று மணிநேர விசாரணை ஜி.எல். பீரிஸிடம் கேட்கப்பட்டதென்ன முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் இன்று இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்ட சம்பவம் கவனத்தை ஈர்த்துள்ளது.இன்று (20) காலை ஆணைக்குழுவில் முன்னிலையான அவரிடம், ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணையொன்று தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.ஆனால், அவர் எதற்காக அழைக்கப்பட்டார் என்பதுதான் இங்கு முக்கியமான விடயம்.அவர் வெளிவிவகார அமைச்சராகப் பதவி வகித்த காலப்பகுதியில் நடைபெற்ற கூட்டமொன்று தொடர்பாகவே இந்த விசாரணை முன்னெடுக்கப்படுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.குறிப்பாக, 2009ஆம் ஆண்டு வெளிவிவகார அமைச்சுடன் தொடர்புடைய கலந்துரையாடல் ஒன்று குறித்த தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்காகவே அவர் அழைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.இதன்போது சுமார் மூன்று மணிநேரம் அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.அதனைத் தொடர்ந்து, ஜி.எல். பீரிஸ் இன்று ஆணைக்குழுவிலிருந்து வெளியேறியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement