கைபேசிகள் மற்றும் மின்கலங்களை நாட்டுக்குள் கொண்டு வந்ததன் காரணத்தினால் மூன்று சீன நாட்டுப் பிரஜைகள் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று (19) மாலை வருகை முனையத்தில் வைத்து அவர்கள் இடைமறிக்கப்பட்டுள்ளனர்.
மூவரும் சீனாவின் ஷாங்காயிலிருந்து சைனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் விமானம் MU -6017 மூலம் மாலை 6.43இற்கு இலங்கைக்கு வந்துள்ளனர். மூவரில் ஒரு பெண்ணும் அடங்குவார்.
சொக்லேட்டுகள், இனிப்புப் பொருட்களுக்கு மத்தியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கைபேசிகள் கொண்டு வரப்பட்டுள்ளன.
மொத்தமாக 514 மில்லியன் ரூபா மதிப்புள்ள 87 கைபேசிகள் மற்றும் 140 மின்கலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
இவை இணைய வழி குற்றச் செயல்களில் பயன்படுத்துவதற்காக கொண்டு வரப்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
சந்தேக நபர்கள் பொலிஸ் காவலில் இருப்பதோடு மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
87 கைபேசிகளுடன் மூன்று சீன நாட்டவர்கள் கட்டுநாயக்கவில் கைது கைபேசிகள் மற்றும் மின்கலங்களை நாட்டுக்குள் கொண்டு வந்ததன் காரணத்தினால் மூன்று சீன நாட்டுப் பிரஜைகள் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.நேற்று (19) மாலை வருகை முனையத்தில் வைத்து அவர்கள் இடைமறிக்கப்பட்டுள்ளனர்.மூவரும் சீனாவின் ஷாங்காயிலிருந்து சைனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் விமானம் MU -6017 மூலம் மாலை 6.43இற்கு இலங்கைக்கு வந்துள்ளனர். மூவரில் ஒரு பெண்ணும் அடங்குவார்.சொக்லேட்டுகள், இனிப்புப் பொருட்களுக்கு மத்தியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கைபேசிகள் கொண்டு வரப்பட்டுள்ளன.மொத்தமாக 514 மில்லியன் ரூபா மதிப்புள்ள 87 கைபேசிகள் மற்றும் 140 மின்கலங்கள் மீட்கப்பட்டுள்ளன.இவை இணைய வழி குற்றச் செயல்களில் பயன்படுத்துவதற்காக கொண்டு வரப்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.சந்தேக நபர்கள் பொலிஸ் காவலில் இருப்பதோடு மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.