• Sep 16 2026

மஹிந்தவின் பேரணி பங்கேற்பை விமர்சிப்பவர்கள் விவசாயி பேரணியை கேள்விக்குட்படுத்த வேண்டும் – சஞ்சீவ எதிரிமான்ன

Chithra / Sep 16th 2026, 3:23 pm
image


ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ கட்சியின் பேரணியில் கலந்துகொண்டதை கேள்விக்குட்படுத்தும் அரசாங்கத் தரப்பினர், அரசாங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட விவசாயி பேரணியில் விவசாய அமைச்சர் லால் காந்த மற்றும் பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன ஆகியோர் கலந்துகொள்ளாததை கேள்விக்குட்படுத்த வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன தெரிவித்துள்ளார்.


பத்தரமுல்லை, நெலும் மாவத்தையில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையகத்தில் இன்று (16) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.


அனுராதபுரத்தில் நடைபெற்ற ‘ஜனசடன’ பேரணி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பெற்ற வெற்றியாக மாத்திரமன்றி, ஜனநாயகத்தை மதிக்கும் நாட்டின் அனைத்து மக்களும் பெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க அரசியல் வெற்றியாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


அரசாங்கத்திற்கு எதிரான ஜனநாயகப் போராட்டங்களுக்கு அடக்குமுறைகள் பிரயோகிக்கப்பட்டு வரும் நிலையிலும், நாட்டின் பிரதான அரசியல் இயக்கம் என்ற வகையில் அவற்றைக் கடந்து மாபெரும் பேரணியை நடத்த முடிந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


கடந்த தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்த பெரும்பான்மையான மக்களே தமது பேரணியில் கலந்துகொண்டதாகவும், இதனால் அரசாங்கம் அதிர்ச்சியடைந்துள்ளதாகவும் சஞ்சீவ எதிரிமான்ன தெரிவித்துள்ளார்.


தமது ஒற்றைப் பேரணிக்கு பதிலளிக்கும் வகையில் அரசாங்கம் மூன்று பேரணிகளை ஏற்பாடு செய்ததாகவும், ஜனாதிபதி தனது உரையின் பெரும்பகுதியை தமது பேரணிக்கு பதிலளிப்பதற்காகவே பயன்படுத்தியதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.


நீண்ட இடைவெளிக்குப் பின்னர் கட்சி நடத்திய மாபெரும் பேரணியில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைவர் மஹிந்த ராஜபக்ஷ கலந்துகொண்டமை இயல்பான அரசியல் நிகழ்வு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


எனினும், மஹிந்த ராஜபக்ஷவின் வருகையை விமர்சிக்கும் அரசாங்கத் தரப்பினர், அரசாங்கம் ஏற்பாடு செய்த விவசாயி பேரணியில் விவசாய அமைச்சர் லால் காந்த மற்றும் பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன ஆகியோர் கலந்துகொள்ளாத விடயத்தை மறைக்க முயற்சிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


மஹிந்த ராஜபக்ஷவின் பேரணி பங்கேற்பை விட, விவசாயப் பகுதியில் நடைபெற்ற விவசாயி பேரணியில் விவசாய அமைச்சரும் பிரதி அமைச்சரும் கலந்துகொள்ளாததே அதிக அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த விடயம் என சஞ்சீவ எதிரிமான்ன மேலும் தெரிவித்துள்ளார்.


விவசாயிகளுக்கு முகங்கொடுக்க முடியாத நிலை தற்போதைய அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ளதையே இந்த விடயம் வெளிப்படுத்துவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மஹிந்தவின் பேரணி பங்கேற்பை விமர்சிப்பவர்கள் விவசாயி பேரணியை கேள்விக்குட்படுத்த வேண்டும் – சஞ்சீவ எதிரிமான்ன ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ கட்சியின் பேரணியில் கலந்துகொண்டதை கேள்விக்குட்படுத்தும் அரசாங்கத் தரப்பினர், அரசாங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட விவசாயி பேரணியில் விவசாய அமைச்சர் லால் காந்த மற்றும் பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன ஆகியோர் கலந்துகொள்ளாததை கேள்விக்குட்படுத்த வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன தெரிவித்துள்ளார்.பத்தரமுல்லை, நெலும் மாவத்தையில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையகத்தில் இன்று (16) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.அனுராதபுரத்தில் நடைபெற்ற ‘ஜனசடன’ பேரணி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பெற்ற வெற்றியாக மாத்திரமன்றி, ஜனநாயகத்தை மதிக்கும் நாட்டின் அனைத்து மக்களும் பெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க அரசியல் வெற்றியாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.அரசாங்கத்திற்கு எதிரான ஜனநாயகப் போராட்டங்களுக்கு அடக்குமுறைகள் பிரயோகிக்கப்பட்டு வரும் நிலையிலும், நாட்டின் பிரதான அரசியல் இயக்கம் என்ற வகையில் அவற்றைக் கடந்து மாபெரும் பேரணியை நடத்த முடிந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.கடந்த தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்த பெரும்பான்மையான மக்களே தமது பேரணியில் கலந்துகொண்டதாகவும், இதனால் அரசாங்கம் அதிர்ச்சியடைந்துள்ளதாகவும் சஞ்சீவ எதிரிமான்ன தெரிவித்துள்ளார்.தமது ஒற்றைப் பேரணிக்கு பதிலளிக்கும் வகையில் அரசாங்கம் மூன்று பேரணிகளை ஏற்பாடு செய்ததாகவும், ஜனாதிபதி தனது உரையின் பெரும்பகுதியை தமது பேரணிக்கு பதிலளிப்பதற்காகவே பயன்படுத்தியதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.நீண்ட இடைவெளிக்குப் பின்னர் கட்சி நடத்திய மாபெரும் பேரணியில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைவர் மஹிந்த ராஜபக்ஷ கலந்துகொண்டமை இயல்பான அரசியல் நிகழ்வு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.எனினும், மஹிந்த ராஜபக்ஷவின் வருகையை விமர்சிக்கும் அரசாங்கத் தரப்பினர், அரசாங்கம் ஏற்பாடு செய்த விவசாயி பேரணியில் விவசாய அமைச்சர் லால் காந்த மற்றும் பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன ஆகியோர் கலந்துகொள்ளாத விடயத்தை மறைக்க முயற்சிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.மஹிந்த ராஜபக்ஷவின் பேரணி பங்கேற்பை விட, விவசாயப் பகுதியில் நடைபெற்ற விவசாயி பேரணியில் விவசாய அமைச்சரும் பிரதி அமைச்சரும் கலந்துகொள்ளாததே அதிக அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த விடயம் என சஞ்சீவ எதிரிமான்ன மேலும் தெரிவித்துள்ளார்.விவசாயிகளுக்கு முகங்கொடுக்க முடியாத நிலை தற்போதைய அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ளதையே இந்த விடயம் வெளிப்படுத்துவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement