• May 21 2026

"முழு நாடுமே ஒன்றாக" தேசிய நடவடிக்கை - ஒரேநாளில் 1,115 பேர் கைது

Chithra / Nov 16th 2025, 12:50 pm
image


போதைப்பொருள் ஒழிப்புக்கான "முழு நாடுமே ஒன்றாக" தேசிய நடவடிக்கையின் கீழ் நேற்று (15) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் 1,000க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

நேற்று ஒரு நாளில் 1,131 சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், அதில் 1,115 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். 

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து 531 கிராம் ஹெரோயின்,  754 கிராம் ஐஸ், 8 கிலோ 953 கிராம் கஞ்சா 249 போதை மாத்திரைகள்  உட்பட பல போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும், 31 சந்தேகநபர்களுக்குத் தடுப்புக் காவல் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன், 63 பேர் புனர்வாழ்வுக்காக அனுப்பப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

"முழு நாடுமே ஒன்றாக" தேசிய நடவடிக்கை - ஒரேநாளில் 1,115 பேர் கைது போதைப்பொருள் ஒழிப்புக்கான "முழு நாடுமே ஒன்றாக" தேசிய நடவடிக்கையின் கீழ் நேற்று (15) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் 1,000க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று ஒரு நாளில் 1,131 சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், அதில் 1,115 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து 531 கிராம் ஹெரோயின்,  754 கிராம் ஐஸ், 8 கிலோ 953 கிராம் கஞ்சா 249 போதை மாத்திரைகள்  உட்பட பல போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.மேலும், 31 சந்தேகநபர்களுக்குத் தடுப்புக் காவல் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன், 63 பேர் புனர்வாழ்வுக்காக அனுப்பப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement